பொது ஜனவரி 16,2021 | 09:52 IST
கால்நடை தீவனமாக பல்வேறு நாடுகளில் உள்ள உணவுப் புழுவை மனிதர்கள் சாப்பிட ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்துள்ளது. இந்த மஞ்சள் புழுக்களை வறுத்து மசலாக்களில் பயன்படுத்தவும், மாவாக்கி பிஸ்கட்டுகள், பாஸ்தா மற்றும் ரொட்டிகளில் சேர்கவும், பிற உணவு வகைகளில் முழுதாக பயன்படுத்தவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு நிறைந்த உணவு என்று கூறி ஆங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு பூச்சி வளர்ப்பு நிறுவனமான மைக்ரோநியூட்ரிஸின் விண்ணப்பத்திற்குப் பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போன்றவையும் உண்பதற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். உணவு புழு பாக்கெட்டுகள் சூப்பர் மார்க்கெட்டிற்கு வர சிறிது காலம் ஆகும். 2030ம் ஆண்டு புழுக்கள் உற்பத்தி 2.6 லட்சம் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து