சம்பவம் » லாரி மீது பஸ் மோதி 3 பேர் பலி ஆகஸ்ட் 09,2018 13:42 IST
பெங்களூருவிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையத்தில் சவுக்கு மரம் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி மீது பின்பக்கமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் பஸ் கிளீனர் சித்தார்த், கேரளா பந்தலத்தை சேர்ந்த மினிவர்க்கீஸ் அவரது 10 வயது மகன் ஆசல்விஜோ ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் லாரி கவிழ்ந்து சவுக்கு மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குமாரபாளையம் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
வாசகர் கருத்து