விளையாட்டு » பூப்பந்து: பைனலில் ஜி.சி.டி., ராமகிருஷ்ணா ஆகஸ்ட் 13,2018 17:32 IST
சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், கோவை, 11வது மண்டல மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி குமரகுரு கல்லுாரியில் நடந்தது. 7 இன்ஜினியரிங் கல்லுாரி அணிகள் பங்கேற்றன. திங்களன்று நடந்த அரையிறுதிப்போட்டியில், ஜி.சி.டி., கல்லூரி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.டி., டெக் அணியையும்; ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, 2-1 என்ற செட் கணக்கில், கே.சி.டி., கல்லுாரியையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
வாசகர் கருத்து