பொது » பள்ளி தரத்தை உயர்த்துங்க மாணவர்கள் ஆவேசம் ஆகஸ்ட் 13,2018 19:00 IST
திருவண்ணாமலை, செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உயர்நிலை, மேநிலை பள்ளியில் படிக்க 15 கி.மீ தூரத்தில் உள்ள செங்கம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி, அரசுக்கு செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையான ஒரு லட்சம் ரூபாயை, கிராம மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டியுள்ளனர். இதுவரை பள்ளி தரம் உயர்த்தப்படாததை கண்டித்து மாணவ மாணவிகள் நடத்திய மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தாசில்தார் ரேணுகா, மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
வாசகர் கருத்து