விளையாட்டு » மாவட்ட சப் ஜூனியர் கால்பந்து ஆகஸ்ட் 17,2018 19:19 IST
'கோத்தி' என்ற ஜெர்மன் நிறுவனம் சார்பில் 'லேர்ன் ஜெர்மன்' என்ற தலைப்பில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 16 பள்ளிகள் 'நாக்அவுட்' முறையில் பங்கேற்றன. வெள்ளியன்று நடந்த போட்டியில், கார்மல்கார்டன் பள்ளியும், கிக்கானி பள்ளியும் மோதின. இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கார்மல் கார்டன் பள்ளி வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து