பொது » முதலைகளால் மக்கள் அச்சம் ஆகஸ்ட் 18,2018 19:00 IST
சிதம்பரம் அருகே வெளக்குடி கிராமத்தில் கொள்ளிட நீரில் 10க்கும் மேற்பட்ட முதலைகள் காணப்படுகின்றன. கொள்ளிட கரையில் உள்ள பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் முதலைகள் எந்நேரமும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பல முறை கொள்ளிட கரையோரம் முதலைகளால் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அடுத்த அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலும் வனத்துறை பராமரிப்பில் இருந்த 150 முதலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து