சிறப்பு தொகுப்புகள் » வீணா போகுது அங்கே தரிசா மாறுது இங்கே ஆகஸ்ட் 20,2018 18:00 IST
திருவாரூர் அருகே கேக்கரை, தெற்கு சேத்தி, வடக்கு சேத்தி, பகுதிகளில் சுமார் 960 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றுக்கு ஓடம்போக்கி ஆற்றில் ஏ பிரிவு கிளை வாய்க்காலிலிருந்து பி பிரிவு கிளைகளாகப் பிரிந்து வருகின்ற பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. நாளடைவில் திருவாரூர் நகரத்தின் வளர்ச்சி காரணமாக வாய்க்கால் முழுவதும் கழிவு நீரோடைகளாக மாறி புதர்கள் மண்டி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து நீரோட்டமே தடைபட்டு விட்டது. 15 ஆண்டுகளாக வாய்க்கால் தூர்வாரப்படாததால், காவிரியில் வெள்ளம் பாய்ந்தோடும் நேரத்திலும் சொட்டு தண்ணீர் கூட இன்றி, விவசாயம் செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர் இப்பகுதி விவசாயிகள். பைட் வரதராஜன் விவசாயி, கேக்கரை. கலியபெருமாள் விவசாயி, கேக்கரை. தொடர்ந்து தண்ணீர் வரத்து இன்றி அனைத்து நிலங்களும் தரிசாக மாறும் முன் அரசு ஒதுக்கும் நிதியை அதிகாரிகள் முழுமையாக செலவு செய்து வாய்க்காலை தூர்வாரி 960 ஏக்கர் விளை நிலங்களையும், விவசாயத்தையும் காக்க முன் வர வேண்டும்...
வாசகர் கருத்து