Advertisement

பொது » கேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம் ஆகஸ்ட் 24,2018 19:10 IST

பொது » கேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம் ஆகஸ்ட் 24,2018 19:10 IST

கேரளாவில் ஏற்பட்ட பேரழிவுக்கு தமிழ்நாடுதான் காரணம் என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு அளித்துள்ள புகார் தமிழக மக்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. கேரளாவை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் இருந்து ஒருவர் தன் ஆதங்கத்தையெல்லாம் கொட்டி கேரள அரசுக்கு திறந்த மடல் எழுதியுள்ளார். அதில் அவர் சொல்கிறார்: அத்தனை அழிவை எதிர்கொண்ட பின்னரும் உங்களுக்கு அந்த சின்னஞ்சிறு முல்லைப்பெரியாறுதான் உறுத்துகிறது என்றால் உங்கள் மீது இரக்கம் கொண்டதே தவறுதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இரண்டு லட்சம் கனஅடி நீரை வெளியேற்றி ஆலுவாவையும் எர்ணாகுளம் கொச்சியையும் வெள்ளக்காடாக்கிய இடுக்கி அணை மீது உங்களுக்கு வராத கோபம் வெறும் 20 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் முல்லைப்பெரியாறு மீது வருகிறது என்றால் உங்கள் மீது நாங்கள் எப்படி இரக்கம் கொள்ள முடியும். பம்பை ஆற்றையும் அச்சங்கோவில் ஆற்றையும் இணைத்து அதை தமிழ்நாட்டின் வைப்பாறோடு இணைப்போம் என்று நாங்கள் ஒரு நூற்றாண்டாக கத்திக்கொண்டிருக்கிறோம். அது உங்கள் செவிகளில் ஏறியிருந்தால் பம்பை இன்று வெள்ளக்காடாக மாறியிருக்காது. மொத்தத் தண்ணீரையும் வைப்பாற்றில் ஓடவிட்டிருந்தால் காய்ந்துகிடக்கும் எங்கள் விருதுநகர் மாவட்டம் கடைத்தேறியிருக்கும். செண்பகவல்லி அம்மன்கோவில் அணைக்கட்டை உடைத்தெறிந்த உங்களையே திரும்ப கட்டித்தாருங்கள் என்று கதறினோம். கட்டுவதற்காக நாங்கள் கொடுத்த நிதி ஐந்துலட்சம். ஆண்டு 1967. அதை கட்டிமுடித்து எங்களுக்கான தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொடுத்திருந்தீர்கள் என்றால் இன்று சபரிகிரி அணையும் பிளீச்சிங் அணையும் இத்தனை வேகமாக நிரம்பியிருக்காது. நாங்கள் எங்கள் பொறியாளர் மூலம் கொடுத்த ஐந்து லட்சத்தை இருபது ஆண்டுகள் கழித்து எங்களுக்கே அனுப்பினீர்கள். நெடுங்கண்டம் அருகே இன்று பெருக்கெடுத்து ஓடும் கல்லாறு தண்ணீரை மதுரை மக்கள் குடிப்பதற்கு தாருங்கள் என்று எம்ஜிஆரும் மதுரை மேயர் பட்டுராஜனும் உங்களை தேடிவந்து கெஞ்சிக் கேட்டார்கள். அன்றைக்கு முதல்வராக இருந்த அச்சுதமேனனுக்கோ கருணாகரனுக்கோ அவர்களின் கதறல் கேட்டிருந்தால் இன்று கல்லாறில் பெருகி ஓடும் நீரில் பெருமளவை மதுரை உள்வாங்கி இருக்கும். இன்று மூணாறையே மூழ்கடித்து ஓடும் குட்டியாறையும் கன்னியாறையும் நல்லதண்ணி ஆறையும் மூணாறு நகரிலிருந்து பெரியபாறை...நயமக்காடு...தலையாறு...லக்கம்...சட்டமூணாறு...பள்ளக்காடு வழியாக மறையூர் கொண்டுவந்து அங்கிருந்து கிழமேலாக நீண்டுகிடக்கும் பள்ளத்தாக்கில் ஓடச்செய்து அமராவதியோடு இணைத்திருக்க ஆயிரம் வாய்ப்புகள் கிடைத்தும் அதை நிராகரித்தீர்கள். மாறாக வம்படியாக அந்த மூன்று ஆறுகளையும் மின்சாரத்தை தவிர எதற்கும் பயனில்லாத ஆனையிறங்கல் அணையோடு நீங்கள் சேர்த்துவிட்ட அழிச்சாட்டியத்தால் இன்று மூணாறு நிரம்பி வழிகிறது. அச்சுதானந்தன் என்கிற அதிமேதாவி முதல்வராக இருந்தபோது மண்வெட்டி கடப்பாறையோடு நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையை உடைக்க தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார். அச்சங்கோவிலாறுக்கு செல்லவேண்டிய நீரை மறித்து தமிழகம் அணைகட்டியதாக அடாவடி செய்தார். வயிற்றுப் பிழைப்புக்காக நாங்கள் வயலில் இருந்ததால் அச்சுதானந்தன் திரும்பிப்போனார். இல்லை, கதை மாறியிருக்கும். நீலகிரியை 1956 ல் நேருவிடம் எழுதிக்கேட்ட நீங்கள் அது கிடைக்காமல் போனதால் இன்று மாயாற்று நீரை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பரம்பிக்குளம் ஆழியாறில் பிரச்சனை. நெய்யாற்றின்கரை இடதுகால்வாயில் பிரச்சனை... அட்டப்பாடி முக்காலியில் பவானியை முன்வைத்து பிரச்சனை... பில்லூர் அணையில் பிரச்சனை... இப்படியாக உங்கள் நீர்த்துரோகங்களை பட்டியலிட்டுப் போகலாம். தமிழர்கள் ஆதிகாலத்தில் வகுத்துத்தந்த நீர்மேலாண்மை எனும் அரிய தத்துவத்தை மலையாள சகோதரர்கள் இனியாவது உணரவேண்டும்.


play button 01:32 திமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது?

திமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது?

play button 00:36 முதல்வரை கைது செய்யனும்

முதல்வரை கைது செய்யனும்

play button 01:15 ராஜ்நாத்சிங்கைச் சந்திக்கும் காங்., தலைவர்கள்

ராஜ்நாத்சிங்கைச் சந்திக்கும் காங்., தலைவர்கள்

play button 01:00 தமிழ்ச் சங்கப்  பொன்விழா துவக்கம்

தமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்

play button 00:56 இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி

இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி

play button 01:40 அரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை

அரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை

play button 00:46 பற்றி எரிந்த ஆம்னி பஸ்

பற்றி எரிந்த ஆம்னி பஸ்

play button 00:29 பஸ்-வேன் மோதல் 4 பேர்  பலி

பஸ்-வேன் மோதல் 4 பேர் பலி

play button 00:24 பிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி

பிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி

play button 01:00 வீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி

வீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி

play button 00:59 தெப்பத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

தெப்பத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

play button 01:27 சுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி

சுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி

play button 00:30 நித்யகல்யாண பெருமாள் திருக்கல்யாணம்

நித்யகல்யாண பெருமாள் திருக்கல்யாணம்

play button 01:30 கிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்

கிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்

play button 00:23 பாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது

பாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது

play button 00:42 நாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா

நாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா

play button 00:31 மாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்

மாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்

play button 05:55 பழி தீர்க்குமா இந்தியா

பழி தீர்க்குமா இந்தியா

play button 00:30 சீட் கேரண்டி கிடையாது

சீட் கேரண்டி கிடையாது

play button 00:16 மாநில ஐவர் கால்பந்து

மாநில ஐவர் கால்பந்து

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X