சம்பவம் » விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு ஆகஸ்ட் 26,2018 13:52 IST
திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. கூலி தொழிலாளியான இவரது மகன் மௌலீஸ்வரன் பொன்னேரி அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தான். வெள்ளியன்று அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மௌலீஸ்வரனை கும்மிடிப்பூண்டி ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந் நிலையில் மௌலீஸ்வரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவனை அழைத்து செல்லும்படி கைப்பேசியில் அவனது பெற்றோரை தொடர்பு கொண்ட ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பார்த்த போது கும்மிடிப்பூண்டி-எளாவூர் இடையே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மௌலீஸ்வரனின் உடல் இருப்பதை கண்ட அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
வாசகர் கருத்து