பொது » தமிழுக்கு பிரதமர் புகழாரம் ஆகஸ்ட் 27,2018 15:00 IST
வானொலியில் ஒவ்வொரு மாத கடைசி ஞாயிறு அன்று, 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலமாக மக்களுடன் பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த ஞாயிறு பேசும்போது, ”உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் என்பதில் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை” என்று கூறினார். அதேபோல மற்றொரு தொன்மொழியான சமஸ்கிருதம் உலக அளவில் அறிவியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருவதும் நாம் பெருமைப்பட்டத்தக்க விஷயம் என்றார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் கட்டுமான பொறியியல் அபூர்வமானது என்பதையும் மோடி சுட்டிக் காட்டினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நமது முன்னோர்கள் கட்டிடக் கலை தொழில் நுட்பத்திலும் பொறியியலிலும் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதற்கு தஞ்சை பெரிய கோயில் கோபுரம் உயரமான சான்று என்று மோடி குறிப்பிட்டார். பொது நிகழ்ச்சிகளிலும் வெளிநாடுகளிலும் பேசும்போது தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் பழம்பெருமை குறித்த ஏதேனும் ஒரு தகவலை வெளிப்படுத்துவதை தவறாமல் செய்து வருகிறார் பிரதமர் மோடி.
வாசகர் கருத்து