Advertisement

பொது » வழிப்பறி நாடகமாடிய கேடி சகோதரி கைது ஆகஸ்ட் 29,2018 00:00 IST

பொது » வழிப்பறி நாடகமாடிய கேடி சகோதரி கைது ஆகஸ்ட் 29,2018 00:00 IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவரின் மனைவி உமா. ராமநாதபுரம் கூட்டுறவு சொசைட்டி வங்கி லாக்கரில் வைத்திருந்த 300 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு நடந்து வந்த போது, மூன்று பேர் நகைப்பையை பறித்து சென்றதாக கமுதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து உமா, அவரது கணவர் குருமூர்த்தியிடம் விசாரிக்க ஆரம்பித்தனர். உமாவின் அக்கா சண்முகவடிவு. இவரது கணவர் பூபதிராஜா, சென்னையில் சினிமா பைனான்சியராக உள்ளார். இவர்கள் அனைவரும் நடிகர் செந்திலின் உறவின்ரகள். சண்முகவடிவு, தனது மகன் பழனிசாமி திருமணத்திற்காக நகைகளை சேர்த்து வைத்து, தங்கை உமா மூலம் லாக்கரில் வைக்கச் சொல்லி கொடுத்துள்ளார். இப்படி கொடுத்த 300 பவுன் நகைகளை உமாவும், கணவரும் விற்றும், அடகு வைத்தும் ஏமாற்றி வாழ்ந்துள்ளனர். சகோதரியின் 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி தின்றுள்ளனர். இந்நிலையில் ஆக. 29 அன்று அருப்புக்கோட்டையில் மகன் திருமணத்திற்காக, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, சண்முகவடிவு, நகைகளை எடுக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். வங்கி விடுமுறை, மேலாளர் லீவு என காரணங்களை சொல்லி சமாளித்த உமா, நகைகள் வழிப்பறி செய்யப்பட்டதாக பொய் கூறி, பிரச்னையை திசைதிருப்பினார். கமுதி டிஎஸ்பி சண்முகசுந்தரம் விசாரணையில் இருவரின் நாடகமும் அம்பலமானது. மகன் திருமணம் குறித்த சந்தோஷத்தில் 
இருந்த பூபதிராஜா, சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார். மனவேதனை அடைந்த நிலையில், வழக்கு பதிய வேண்டாம் என்றும் இதோடு அவர்களது உறவு முறிந்து விட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்து சென்றார்.


play button 00:55 பழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

play button 01:10 பிடாரி இரணியம்மன் கோயிலில் காப்புகட்டுதல் விழா

பிடாரி இரணியம்மன் கோயிலில் காப்புகட்டுதல் விழா

play button 10:20 களவு பத்திரிக்கையாளர் சந்திப்பு

களவு பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 00:35 தேசிய அளவிலான வலைப்பந்து போட்டி

தேசிய அளவிலான வலைப்பந்து போட்டி

play button 03:44 பா.ம.க போட்ட கண்டிஷன்

பா.ம.க போட்ட கண்டிஷன்

play button 07:04 நட்டோம்… விற்றோம்… லாபம் பார்க்கிறோம்… ஆன்லைன் விவசாயிகள் அசத்தல்

நட்டோம்… விற்றோம்… லாபம் பார்க்கிறோம்… ஆன்லைன் விவசாயிகள் அசத்தல்

play button 00:18 கிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா

கிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா

play button 00:28 கல்லூரி கிரிக்கெட்: சி.எம்.எஸ்., வெற்றி

கல்லூரி கிரிக்கெட்: சி.எம்.எஸ்., வெற்றி

play button 00:24 மாவட்ட பள்ளிகள் கோகோ

மாவட்ட பள்ளிகள் கோகோ

play button 05:14 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:25 கல்யாண வெங்கட்ரமணர் கோயில் தேரோட்டம்

கல்யாண வெங்கட்ரமணர் கோயில் தேரோட்டம்

play button 02:04 அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க  கூட்டணி

அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி

play button 00:46 தினகரன் தேர்தலை சந்திக்க மாட்டார்

தினகரன் தேர்தலை சந்திக்க மாட்டார்

play button 00:20 முதல்வர் கோப்பைக்கான  போட்டி

முதல்வர் கோப்பைக்கான போட்டி

play button 15:43 திருந்தி வந்தால்  ஏற்பேன்

திருந்தி வந்தால் ஏற்பேன்

play button 00:37 வெளியுறவுத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

வெளியுறவுத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

play button 00:32 இலவச மாடு வழங்க ஐகோர்ட் கிளை தடை

இலவச மாடு வழங்க ஐகோர்ட் கிளை தடை

play button 00:18 ஆற்றுகால் பொங்கல் விழா

ஆற்றுகால் பொங்கல் விழா

play button 00:33 பொய்வழக்கை உடைப்பேன் : முருகன் ஆவேசம்

பொய்வழக்கை உடைப்பேன் : முருகன் ஆவேசம்

play button 00:32 1483 பவுன் தங்க நகை  கொள்ளை

1483 பவுன் தங்க நகை கொள்ளை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X