பொது » பிளாஸ்டிக் தடை கூடாது ஒழுங்குபடுத்த வேண்டும் ஆகஸ்ட் 29,2018 15:00 IST
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. அரசு புறம்போக்கு நிலத்தில் இயங்கி வரும் இக்கடைகளை அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் முறைகேடாக கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறி, வணிகர்கள் கடைகளை அடைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பேசிய வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், சில்லறை வணிகத்தை அழித்து ஆன்லைன் வர்த்தகத்தைக் கொண்டுவருவது தான் அரசின் நோக்கம் என குற்றஞ்சாட்டினார். ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக்கை ஒழித்து விடாமல் ஒழுங்குபடுத்தி, வரன்முறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வாசகர் கருத்து