பொது » ஆளில்லா சிறு விமானம் முன்னெச்சரிக்கை ஆய்வு ஆகஸ்ட் 31,2018 12:00 IST
தஞ்சாவூரில், பருவ மழைக் காலத்தில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆணையின்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வானிலை ஆய்வுத்துறை மாணவர்களைக் கொண்டு ஆளில்லா சிறு விமானம் மூலம் துல்லியமாக அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், அக்னியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியினை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து