சம்பவம் » 40 அடி ஆழத்தில் விழுந்த முதியவர் செப்டம்பர் 01,2018 20:00 IST
சிதம்பரம் சின்னகாஜியார் தெருவில் வசித்து வருபவர் சையதுசபீர்அகமது. இவர் தனது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தோட்டத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி திடீரென தரைக் கிணற்றில் விழுந்தார். தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் ஏணி மூலம் கயிற்றைக் கட்டி உள்ளே இறங்கினர். பின்னர் முதியவர் சையதுசபீர்அகமதுவை பாதுகாப்பாக மீட்டு மேலே அழைத்து வந்தனர். காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வாசகர் கருத்து