Advertisement

விளையாட்டு » 15 தங்க பதக்கங்களுடன் இந்தியா செப்டம்பர் 01,2018 20:58 IST

விளையாட்டு » 15 தங்க பதக்கங்களுடன் இந்தியா செப்டம்பர் 01,2018 20:58 IST

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. சனிக்கிழமையன்று இந்தியா தங்கப்பதக்கங்கள் கைப்பற்றியது. 49 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் அமித் பங்கல், உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டுஸ்மடோவை வீழ்த்தி, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 75 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இதேபோல் பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பர்தான் பிரணாப், சர்க்கார் ஷிப்நாத் ஜோடி இறுதிச்சுற்றில் 384 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. சீனாவின் யாங் லிக்சின்-சென் காங் ஜோடி 378 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. மூன்று மற்றும் 4வது இடங்களைப் பிடித்த இந்தோனேசியா மற்றும் ஹாங்காங் ஜோடிகளுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மகளிருக்கான ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதி போட்டியில், இந்தியாவை சேர்ந்த சுனைனா குருவில்லா மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் ஹாங்காங் வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கங்களை வென்றனர். இதில் முதல் 2 செட்களை லோக் ஹோவிடம் பறிகொடுத்த சுனைனா 3வது செட்டை கைப்பற்றினார். ஆனால் 4வது செட்டை கைப்பற்ற முடியாத நிலையில் போட்டியில் அவர் தோல்வி கண்டார். இந்த போட்டியில் 8க்கு-11, 6க்கு-11, 12க்கு-10, 3க்கு-11 என்ற செட் கணக்கில் லோக் ஹோ வெற்றி பெற்றார். ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலம் வென்று ஆறுதல் அடைந்தது. இதற்கான போட்டியில் 2க்கு ஒன்று என பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி 1986, 2010 ஆண்டுகளைத் தொடர்ந்த 2018ஆம் ஆண்டு 3வது முறையாக வெண்கலம் வென்றது. 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் என இது வரை மொத்தம் 67 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. இதனிடையே ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமலுக்கு ரூ.20 லட்சமும், பாய்மர படகு குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


play button 02:27 மாவட்டவாரியாக தேர்ச்சி எவ்வளவு? | 12th Exam Result | +2 Exam | School | Education

மாவட்டவாரியாக தேர்ச்சி எவ்வளவு? | 12th Exam Result | +2 Exam | School | Education

play button 01:01 பணம் பறிமுதல் செய்யவில்லை

பணம் பறிமுதல் செய்யவில்லை

play button 00:29 வாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை

வாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை

play button 01:02 1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

play button 00:53 பச்சைபட்டில் ஆற்றில் இறங்கிய வீர அழகர்

பச்சைபட்டில் ஆற்றில் இறங்கிய வீர அழகர்

play button 00:31 மதுரையில் ஓட்டுப்பதிவு நிறைவு

மதுரையில் ஓட்டுப்பதிவு நிறைவு

play button 04:58 செய்திசுருக்கம் |Seithi Surukkam 18-04-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 18-04-2019 | Short News Round Up | Dinamalar

play button 02:38 வேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி?

வேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி?

play button 01:02 மக்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு

மக்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு

play button 01:08 புதுச்சேரியில் 80 %  ஓட்டுப்பதிவு

புதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு

play button 00:39 மகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்

மகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்

play button 00:26 அதிரடிப்படை பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு

அதிரடிப்படை பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு

play button 00:19 146 பேருக்கு ஓட்டில்லை

146 பேருக்கு ஓட்டில்லை

play button 00:21 ஓட்டு போட வந்த பெண் மரணம்

ஓட்டு போட வந்த பெண் மரணம்

play button 00:54 ஓட்டுப்பதிவில் பானை உடைப்பு , கலவரம்

ஓட்டுப்பதிவில் பானை உடைப்பு , கலவரம்

play button 01:43 சாருபாலாவால் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

சாருபாலாவால் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

play button 00:54 புதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு

புதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு

play button 02:58 ரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்

ரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்

play button 00:46 புதுமணத்  தம்பதியர் ஓட்டுப்பதிவு

புதுமணத் தம்பதியர் ஓட்டுப்பதிவு

play button 02:32 மாலை 6 மணி செய்திகள் | Seithi Surukkam 18-04-2019 | Short News Round Up | Dinamalar

மாலை 6 மணி செய்திகள் | Seithi Surukkam 18-04-2019 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X