Advertisement

விளையாட்டு » 15 தங்க பதக்கங்களுடன் இந்தியா செப்டம்பர் 01,2018 20:58 IST

விளையாட்டு » 15 தங்க பதக்கங்களுடன் இந்தியா செப்டம்பர் 01,2018 20:58 IST

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. சனிக்கிழமையன்று இந்தியா தங்கப்பதக்கங்கள் கைப்பற்றியது. 49 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் அமித் பங்கல், உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டுஸ்மடோவை வீழ்த்தி, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 75 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இதேபோல் பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பர்தான் பிரணாப், சர்க்கார் ஷிப்நாத் ஜோடி இறுதிச்சுற்றில் 384 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. சீனாவின் யாங் லிக்சின்-சென் காங் ஜோடி 378 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. மூன்று மற்றும் 4வது இடங்களைப் பிடித்த இந்தோனேசியா மற்றும் ஹாங்காங் ஜோடிகளுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மகளிருக்கான ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதி போட்டியில், இந்தியாவை சேர்ந்த சுனைனா குருவில்லா மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் ஹாங்காங் வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கங்களை வென்றனர். இதில் முதல் 2 செட்களை லோக் ஹோவிடம் பறிகொடுத்த சுனைனா 3வது செட்டை கைப்பற்றினார். ஆனால் 4வது செட்டை கைப்பற்ற முடியாத நிலையில் போட்டியில் அவர் தோல்வி கண்டார். இந்த போட்டியில் 8க்கு-11, 6க்கு-11, 12க்கு-10, 3க்கு-11 என்ற செட் கணக்கில் லோக் ஹோ வெற்றி பெற்றார். ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலம் வென்று ஆறுதல் அடைந்தது. இதற்கான போட்டியில் 2க்கு ஒன்று என பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி 1986, 2010 ஆண்டுகளைத் தொடர்ந்த 2018ஆம் ஆண்டு 3வது முறையாக வெண்கலம் வென்றது. 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் என இது வரை மொத்தம் 67 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. இதனிடையே ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமலுக்கு ரூ.20 லட்சமும், பாய்மர படகு குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


play button 00:34 குட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி

குட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி

play button 02:15 செங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல

செங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல

play button 00:22 மழைக்காக சிறப்பு தொழுகை

மழைக்காக சிறப்பு தொழுகை

play button 01:26 தண்ணீர்  தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள்  உதவலாமே....

தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....

play button 01:18 5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்

5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்

play button 17:59 லேடி சமுத்திரக்கனியா? ஜோதிகா பதில்

லேடி சமுத்திரக்கனியா? ஜோதிகா பதில்

play button 02:41 மெட்ரோ ஸ்டேஷன் பாதுகாப்பு கேள்விக்குறி | Chennai Metro Train Security Lapses | Dinamalar

மெட்ரோ ஸ்டேஷன் பாதுகாப்பு கேள்விக்குறி | Chennai Metro Train Security Lapses | Dinamalar

play button 04:51 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-06-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-06-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:25 விவசாயத்துடன் பள்ளிப்படிப்பு

விவசாயத்துடன் பள்ளிப்படிப்பு

play button 01:59 குரங்குகளின்  காவலர்கள்!

குரங்குகளின் காவலர்கள்!

play button 00:48 அகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்

அகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்

play button 03:42 மூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice

மூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice

play button 01:07 கோர்ட்டில் பெண்ணை அடித்த  வக்கீலால் பரபரப்பு

கோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு

play button 00:41 வாலிபால்: கோவை அணி முதலிடம்

வாலிபால்: கோவை அணி முதலிடம்

play button 00:38 மின்வாரிய ஊழியர்கள் விளையாட்டு

மின்வாரிய ஊழியர்கள் விளையாட்டு

play button 00:52 அத்தி வரதர் திருவிழா  பணிகள் மந்தம்

அத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்

play button 01:13 விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

play button 04:22 பிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா?

பிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா?

play button :28 மழை வேண்டி  சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)

மழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)

play button 00:58 பைரவருக்கு சிறப்பு பூஜை

பைரவருக்கு சிறப்பு பூஜை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X