சம்பவம் » 5 டன் அரிசி கடத்தல் செப்டம்பர் 05,2018 17:00 IST
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாமலேரிமுத்தூர், சோமநாயக்கன்பட்டி, பச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தமிழக ரேஷன் அரிசிகள் வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்தன. தகவல் அறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுட்டனர். அப்போது வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 5 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்
வாசகர் கருத்து