அரசியல் » சுகாதார அமைச்சருக்கு எடப்பாடி ஏன் பயப்படுகிறார்? செப்டம்பர் 07,2018 13:00 IST
குட்கா வழக்கில் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்திய சம்பவம் அவருக்கு மட்டுமில்லாமல் ரிடயர்மென்டுக்கு பிறகு சட்டத்தை வளைத்து அவரை மறுநியமனம் செய்த அதிமுக அரசுக்கும் பெரிய தலைகுனிவாக அமைந்துள்ளது. இவ்வளவு தூரம் வந்துவிட்டதால் ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று முதல்வர் பழனிசாமியிடம் சொல்லியிருக்கிறார் ராஜேந்திரன். முதல்வரும் அதை ஏற்கும் மன நிலைக்கு வந்துவிட்டார். அப்போதுதான் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ப்ரஷர் கொடுத்து ராஜேந்திரன் ராஜினாமாவை நீங்கள் ஏற்கக்கூடாது என சொல்லியிருக்கிறார். குட்கா முதலாளியிடம் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியலில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் டாப்பில் இருக்கிறது. வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி, சோதனை நடக்கும்போதே சில டாக்குமெண்டுகளை அடியாள் மூலமாக அமைச்சர் அழிக்க முயன்று அது முடியாமல் போனதெல்லாம் நாட்டு மக்கள் டீவியில் பார்த்த நேரடி காட்சிகள். அப்போது ஆர் கே நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கிய டிடிவி தினகரனுக்கு இடது கையாக இருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். இன்றைக்கும் தினகரன் தினமும் திட்டுகின்ற அமைச்சர்கள் லிஸ்டில் விஜயபாஸ்கர் கிடையாது என்பதி கவனிக்கவும்.
வாசகர் கருத்து