Advertisement

சம்பவம் » உயிரை பலி வாங்கிய ப்ரமோஷன் HDFC அதிகாரியின் சோக முடிவு செப்டம்பர் 10,2018 15:38 IST

சம்பவம் » உயிரை பலி வாங்கிய ப்ரமோஷன் HDFC அதிகாரியின் சோக முடிவு செப்டம்பர் 10,2018 15:38 IST

HDFC பேங்க் உயர் அதிகாரியை அவரது சக அதிகாரிகளே கொலை செய்த சம்பவம் மும்பய் பேங்க் வட்டாரங்களில் பரபரப்புடன் பேசப்படுகிறது. சித்தார்த் வயது 39. மனைவி, 8 வயது மகனுடன் செல்வந்தர்கள் வாழும் மலபார் ஹில் ஏரியாவில் வசித்து வந்தார். கடன் மற்றும் சந்தை அபாயங்கள் குறித்து சித்தார்த்துக்கு அபாரமான அறிவு இருந்தது. எனவே பேங் நிர்வாகம் அவரது கருத்துகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தது. வேகமாக பதவி உயர்வுகளும் கொடுத்தது. HDFC பேங்க் துணை தலைவர் என்ற உயர்ந்த பொறுப்பு சமீபத்தில் அவருக்கு தரப்பட்டது. ஏற்கனவே சித்தார்த் மீது பொறாமையில் இருந்த சக அதிகாரிகள் 4 பேருக்கு இதனால் ஆத்திரம் உண்டானது. தங்களுக்கு கீழ் பணியாற்றிய சித்தார்த்தின் கட்டளைக்கு இனி நாம் கீழ்ப்படிய வேண்டுமே என்ற கவலை. கூடிப்பேசி ஒரு சதி திட்டம் தீட்டினார்கள். 20 வயது டாக்சி டிரைவர் சர்பராஸ் ஷேக் என்பவனிடம் பேசி சித்தார்த் கதையை முடிக்க ஒரு தொகை அட்வான்ஸ் கொடுத்தனர். புதன் இரவு ஏழரை மணிக்கு ஆபீசில் இருந்து கிளம்பிய சித்தார்த் காரை பின்தொடர்ந்தது ஷேக்கின் டாக்சி. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வழி மறித்து சித்தார்த்தை கொலை செய்து, சடலத்தை அங்குள்ள வழிபாட்டு தலத்தின் பின்னால் வீசிவிட்டு சென்றான் ஷேக். அடுத்த நாள் ஒரு அபார்ட்மெண்ட் கார் பார்க்கில் சித்தார்த் கார் நிற்பது போலீஸ் கவனத்துக்கு வந்தது. காரில் ரத்தக்கறையும் பின் சீட்டில் கத்தியும் இருந்தன. சித்தார்த்தின் மொபைல் போன் மூலம் துப்பு துலக்கி ஷேக்கை பிடித்து போலீஸ் உலுக்கியதில் 4 HDFC அதிகாரிகளையும் அவன் கைகாட்டினான். நால்வரும் போலீஸ் பிடியில் வந்துள்ளனர். நான்கு சதிகாரர்களில் ஒருவர் பெண் அதிகாரி.


play button 01:20 தண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்

தண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்

play button 01:00 பன்றி காய்ச்சல் பரவுகிறது

பன்றி காய்ச்சல் பரவுகிறது

play button 00:49 ஜூவல்லரியில் நகைகள் கொள்ளை

ஜூவல்லரியில் நகைகள் கொள்ளை

play button 00:55 கூலிப்படை பைக்கை  பயன்படுத்திய  சப் இன்ஸ்பெக்டர்

கூலிப்படை பைக்கை பயன்படுத்திய சப் இன்ஸ்பெக்டர்

play button 01:06 கடல் வழியே  ஊடுருவிய 5 பேர் கைது

கடல் வழியே ஊடுருவிய 5 பேர் கைது

play button 00:52 எதிர்ப்பு அறிக்கை கூட விடாத முதல்வர்

எதிர்ப்பு அறிக்கை கூட விடாத முதல்வர்

play button 00:38 அதிமுக, அமமுக இணையாது : தினகரன்

அதிமுக, அமமுக இணையாது : தினகரன்

play button 00:32 இருசக்கர வாகனம், வேன் மோதல் : 3 பேர் பலி

இருசக்கர வாகனம், வேன் மோதல் : 3 பேர் பலி

play button 06:55 திருமணம்  (சில திருதங்களுடன்) - இசை வெளியீட்டு விழா

திருமணம் (சில திருதங்களுடன்) - இசை வெளியீட்டு விழா

play button 00:23 அஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி

அஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி

play button 00:59 பா.ஜ.வுடன் கூட்டணி; தம்பிதுரை விளக்கம்

பா.ஜ.வுடன் கூட்டணி; தம்பிதுரை விளக்கம்

play button 01:04 ஸ்டான்லி பிணவறையில் சீட்டாட்டம்

ஸ்டான்லி பிணவறையில் சீட்டாட்டம்

play button 05:05 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:22 விஷவாயு தாக்கி 2பேர் பலி

விஷவாயு தாக்கி 2பேர் பலி

play button 00:54 தென்னிந்திய கால்பந்து போட்டி

தென்னிந்திய கால்பந்து போட்டி

play button 01:06 வெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை  மரணம்

வெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்

play button 00:37 ரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது

ரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது

play button 00:38 கிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

கிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

play button 01:33 ரஜினி ஸ்டைலில் சிகரெட்; ரசிகர் அடித்து கொலை!

ரஜினி ஸ்டைலில் சிகரெட்; ரசிகர் அடித்து கொலை!

play button 00:50 மிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு

மிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X