அரசியல் » அறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார் செப்டம்பர் 11,2018 20:00 IST
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் நடந்த ஊழலால், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மின்வெட்டு காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார். மின்பகிர்மான கழகத்தில்,அரசு ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடியை நீக்கி, மின்பற்றாக்குறையைபோக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாசகர் கருத்து