Advertisement

சிறப்பு தொகுப்புகள் » வரலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர் குழுக்கள் செப்டம்பர் 23,2018 18:00 IST

சிறப்பு தொகுப்புகள் » வரலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர் குழுக்கள் செப்டம்பர் 23,2018 18:00 IST

தமிழகம் முழுவதும் ஏராளமான கல்வெட்டுகள், கோயில் சுவர்களில் உள்ளன. ஆனால், அக்கல்வெட்டுக்கள் பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகிறது. பழங்கால கோவில்கள் வழிபாட்டு தளமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவை வரலாற்று கருவூலங்கள் என மக்களுக்குத் தெரிவதில்லை. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்களின் வரலாறுகள், அக்காலத்திய பண்பாட்டுக் கூறுகள் தானங்கள், பணிக்கு கூலிகள் போன்றவற்றைக் கல்வெட்டு நமக்கு உணர்த்துகின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் கல்வெட்டுகள் மீது, வண்ணம் பூசி, அதில் உள்ள எழுத்துகள் மறைக்கப்பட்டு கருங்கல் சுவர் போல் காட்சியளிகிறது. அத்தகைய கோவில்களில் ஒன்றுதான், விழுப்புரம், திருவாமாத்துார் கிராமத்தில் உள்ள, அபிராமேஸ்வரர் கோவில். 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில், முதலாம் பராந்தகன் சோழர் ஆட்சி காலத்தில், கி.பி., 913ல் கற்கோவிலாக மாற்றப்பட்டது. கோவிலின் வெளிப்புற மற்றும் சுற்று சுவர்களில் மொத்தம் 106 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், முதலாம் மற்றும் இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், காடவராயர்கள், சம்புவராயர்கள், பிற்கால பாண்டிய மன்னர்கள், விஜயநகர நாயக்கர் கால குறிப்புகள் காணப்பட்டது. அப்பர் , சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமான இந்தக் கோயில். சோழர் காலத்தில் புகழ் பெற்ற தலமாக விளங்கியது. இதன் அருமை தெரியாத பொதுமக்கள் கல்வெட்டுகள் மீது வண்ணம் பூசியும், சுவற்றின் மேல் எழுதியும் பாழாக்கி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள கரிகால சோழன் பசுமை மீட்பு படை, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அமைப்பினர், கல்வெட்டுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி அறநிலையத்துறை, தொல்லியல் துறை அனுமதி பெற்று கல்வெட்டில் உள்ள சுண்ணாம்புகளை அகற்றும் பணியில் அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் தெரியும் படி அதனைச் சுத்தப்படுத்தி வருகின்றனர். இதே போல் தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் உள்ள கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தப் பணிகளைச் செய்வோர்களின் விருப்பம் பழமையை மீட்டு மறைக்கபட்ட வரலாறு சின்னங்களை வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் இளைஞர்கள் மேற்கொள்ளும் இந்தச் செயல் பாராட்டுக்குறியதே...


play button 01:50 ஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை

ஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை

play button 01:23 CJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்

CJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்

play button 01:10 பைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

பைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

play button 00:41 புற்றுநோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம்

புற்றுநோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம்

play button 01:03 கருக்கலைப்பு  காலம் நீட்டிக்கப்படுமா?

கருக்கலைப்பு காலம் நீட்டிக்கப்படுமா?

play button 01:25 புயலுக்கு வாய்ப்பு; மழை வருமா

புயலுக்கு வாய்ப்பு; மழை வருமா

play button 03:47 விஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் ?

விஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் ?

play button 00:58 நிழலை காணவில்லையா ? பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day

நிழலை காணவில்லையா ? பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day

play button 00:59 ராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்

ராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்

play button 01:08 பொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை

play button 01:05 வாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்

வாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்

play button 01:03 ஆற்றில் மூழ்கிய ஆறு பேரின்  கடைசி நிமிடங்கள்

ஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்

play button 00:40 சுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்

சுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்

play button 00:32 மாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது

மாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது

play button 00:32 ATMல்  படமெடுத்த  நல்ல பாம்பு

ATMல் படமெடுத்த நல்ல பாம்பு

play button 00:22 காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

play button 01:07 தலைவர்கள் பாச்சா பலிக்காது

தலைவர்கள் பாச்சா பலிக்காது

play button 00:27 கைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு

கைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு

play button 01:58 மோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா

மோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா

play button 00:40 மருத்துவக் கல்லூரிகளுக்குள்  விளையாட்டுப் போட்டி

மருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X