Advertisement

பொது » டோல் ப்ளாசா கொள்ளை செப்டம்பர் 24,2018 10:00 IST

பொது » டோல் ப்ளாசா கொள்ளை செப்டம்பர் 24,2018 10:00 IST

டோல் கேட்டில் வாகனங்களை தடுத்து நிறுத்தி கட்டணம் வசூல் செய்வது அரசாங்கமே நடத்தும் பகல் கொள்ளை என்கிறார் முன்னாள் அரசு செயலர் தேவசகாயம். உதாரணத்துக்கு ஒன்று மட்டும் பார்க்கலாம். சென்னை பைபாஸ் ரோட்டில் 2 டோல் ப்ளாசா உண்டு. ஒன்று வானகரத்தில், மற்றது சூரப்பட்டில். 2003 ல் இருந்து 2 ப்ளாசாவிலும் வசூல் நடக்கிறது. தினசரி 30 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. போன வருடம் மட்டும் 110 கோடியே 19 லட்சம் வசூல். அப்படி என்றால் 15 வருடத்தில் 1,660 கோடி. அந்த 44 கிலோமீட்டர் ரோடு போட ஆன மொத்த செலவே 956 கோடிதான். அதாவது, போட்டதற்கு மேல் 700 கோடி வந்துவிட்டது. ஆனாலும் இன்னும் 5 வருடம் வசூலிப்பார்களாம். அப்புறம் 1ப்ரீயா போக விடுவார்களா? நோ நோ நோ. கட்டணத்தை பாதியாக குறைப்போம் என்கிறது NHAI. தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது அநியாயம் இல்லையா? 1600 கோடி வந்தும் ஆசை தீரவில்லையா என்றால் அதிகாரி சிரிக்கிறார். போட்ட முதலுக்கு வட்டி வேண்டாமா? ரோடு பராமரிக்க துட்டு வேணாமா? என்று கேட்கிறார். அவர் கணக்குப்படி இதுவரை அரசுக்கு திரும்பிய அசல் வெறும் 187 கோடிதானாம்! மிச்ச 1400 கோடியும் வட்டிக்கும் பராமரிப்புக்கும் சரியாக போய்விட்டதாம். என்ன பராமரிப்பு? 2 டோல் பிளாசாவிலும் கக்கூஸ்கூட கிடையாது. சாலையில் லைட் கிடையாது; அவசர உதவி கிடையாது. ரோடு லட்சணம் சொல்லவே வேண்டாம். முதல் போட்டவனுக்கு வட்டி நியாயம்தான். ஆனால் இங்கே முதல் போட்டவர் யார் தெரியுமோ? சாட்சாத் மத்திய அரசாங்கம். அதாகப்பட்டது… அரசாங்கம் கொடுத்த பணத்தில் NHAI ரோடு போட்டது. அதில் ஒரு கான்ட்ராக்டர் மூலம் டோல் வசூலித்து அரசாங்கத்துக்கு கட்டுகிறது. அரசாங்கத்துக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது? வாகனம் வாங்கும்போது ஒவ்வொரு குடிமகனும் ரோடு டேக்ஸ் என்ற பெயரில் கொடுக்கிறானே, அந்த பணத்தில்தான் சாலை அமைக்கிறது அரசு. பிறகு அவனிடமே கட்டாய வசூலும் செய்கிறது. எனவேதான் இதை பகல் கொள்ளை என்று வர்ணிக்கிறார் தேவசகாயம். ”இந்த வசூலே முறையாக நடக்கவில்லை; டிஜிட்டல் மயம் என்று சொல்லிவிட்டு பாதி கேட்டில் பஸ் கண்டக்டர் மாதிரி கை மிசினில் இருந்து ரசீது கிழித்து தருகிறார்கள்; அந்த பணமெல்லாம் கணக்கிலேயே வராது: என்று அடுத்த குண்டு வீசுகிறார் மணல் லாரி அதிபர் சங்க தலைவர் யுவராஜ். டோல் ப்ளாசா எல்லா நாட்டிலும் உண்டு. அந்த ரோடு போட்டது யார், என்ன செலவு என்ற விவரங்கள் அங்கு போர்டில் பார்க்கலாம். இதுவரை எத்தனை வாகனங்கள் அதை தாண்டி போயிருக்கின்றன; போட்ட முதலீடு முழுசாக வந்து சாலை ஃப்ரீயாக இன்னும் எத்தனை வாகனம் தாண்ட வேண்டும் என்பதும் போர்டில் தெரியும். டிஜிட்டல் போர்டில் நம்பர் குறைந்து கொண்டே வருவதையும் பொதுமக்கள் பார்க்கலாம். ஓப்பனாக இல்லாமல் எல்லா விஷயங்களையும் ரகசியமாகவே வைத்திருக்க அரசு விரும்பினால் பொதுமக்கள் முட்டாளாகவே இருக்க வேண்டியதுதான்.


play button 22:36 தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு

play button 00:54 தேனியில் அதிமுகவிற்கு போட்டியில்ல

தேனியில் அதிமுகவிற்கு போட்டியில்ல

play button 06:26 'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்!

'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்!

play button 04:58 கமல் என்ன யோக்கியரா? | Exclusive Interview Radha Ravi | DMK | Kamalhassan

கமல் என்ன யோக்கியரா? | Exclusive Interview Radha Ravi | DMK | Kamalhassan

play button 04:04 செய்திசுருக்கம் |Seithi Surukkam 22-03-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 22-03-2019 | Short News Round Up | Dinamalar

play button 02:21 காலம்  காலமாய் மாறாத அவலம்

காலம் காலமாய் மாறாத அவலம்

play button 01:02 தினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா?

தினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா?

play button 00:50 கனிமொழியின் கருத்து சரியில்ல

கனிமொழியின் கருத்து சரியில்ல

play button 02:01 ஓ.பி.எஸ் செல்வாக்கு ஜெயிக்குமா?

ஓ.பி.எஸ் செல்வாக்கு ஜெயிக்குமா?

play button 00:46 ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது

ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது

play button 01:21 புதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்

புதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்

play button 01:48 பென்ஷன் முக்கியமா? எலக்ஷன் முக்கியமா?

பென்ஷன் முக்கியமா? எலக்ஷன் முக்கியமா?

play button 00:57 ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்

play button 02:18 கோவையில்  பாறை ஒவியங்கள்  கண்டுபிடிப்பு

கோவையில் பாறை ஒவியங்கள் கண்டுபிடிப்பு

play button 00:45 மாணவர்களின் தொங்கும் பயணம்

மாணவர்களின் தொங்கும் பயணம்

play button 00:41 அம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்

அம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்

play button 01:50 பாதுகாப்பான  ஆட்சி அமைய  மோடி வேண்டும்

பாதுகாப்பான ஆட்சி அமைய மோடி வேண்டும்

play button 00:51 சாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை

சாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை

play button 01:30 நிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு?

நிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு?

play button 00:42 கவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்

கவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X