அரசியல் » வழக்குகள் பற்றி சொல்லிவிட்டு தேர்தலில் கிரிமினல் நிற்கலாம் செப்டம்பர் 25,2018 13:45 IST
கிரிமினல் வழக்கில் சிக்கிய அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க முடியாமல் தடுப்பது பார்லிமென் ட் செய்ய வேண்டிய வேலை; அதை கோர்ட் செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட தடை இருக்கிறது. வழக்கு இருந்தாலே தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன குழு தீர்ப்பு சொன்னது. அரசியல் வழியாக கிரிமினல்கள் அதிகாரத்துக்கு வருவது நாட்டையே அழித்து விடும். அவ்வாறு நடக்காமல் தடுக்க சட்டம் இயற்ற வேண்டியது நாடாளுமன்றத்தின் கடமை என்றனர் நீதிபதிகள்.
வாசகர் கருத்து