Advertisement

விளையாட்டு » Sports Weekly Round Up (23-09-18 - 01-10-18) அக்டோபர் 01,2018 00:00 IST

விளையாட்டு » Sports Weekly Round Up (23-09-18 - 01-10-18) அக்டோபர் 01,2018 00:00 IST

ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் வெஸ்ட் இண்டீசில், பெண்களுக்கான 6வது ஐ.சி.சி., 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் நவ. 9-24ல் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டனர். ------ ஆசிய கோப்பை: இந்தியா சாம்பியன் துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணி 48.3 ஓவரில் 222 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பை வென்றது. -------- இந்திய பெண்கள் அசத்தல் ஐந்தாவது 'டுவென்டி-20' போட்டியில் முதலில் 'பேட்' செய்த இந்திய அணி 18.3 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய இலங்கை அணி 17.4 ஓவரில் 105 ரன்னுக்கு சுருண்டு 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி 4-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ------- கோஹ்லிக்கு 'கேல் ரத்னா' மத்திய அரசு சார்பில் விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான 'கேல் ரத்னா' விருது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் சச்சின், தோனிக்கு பின் இவ்விருது வென்ற 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்றார் கோஹ்லி. ------- சிறந்த கால்பந்து வீரர் மாட்ரிச் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் வழங்கப்பட்ட இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா கேப்டன் லுாகா மாட்ரிச் தட்டிச் சென்றார். இவர், சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணியை சிறப்பாக வழிநடத்தி பைனல் வரை அழைத்துச் சென்றார். ------- ஐ.சி.சி., தரவரிசை: ரோகித் 'நம்பர்-2' ஐ.சி.சி., சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 5வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். இவர், 2வது முறையாக 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி நீடிக்கிறார். ------- ஸ்னுாக்கர்: பங்கஜ் அத்வானி வெண்கலம் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய '10-ரெட்' ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடருக்கான அரையிறுதியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, அயர்லாந்தின் பிரண்டன் ஓ'டோனோகு மோதினர். இதில் 19 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார். -------- வில்வித்தை: தீபிகா குமாரி வெண்கலம் துருக்கியில் நடந்த உலக கோப்பை பைனல்ஸ் வில்வித்தை தொடரில் பெண்களுக்கான 'ரிகர்வ்' பிரிவு போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் லிசா உன்ருக்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான தனிநபர் 'ரிகர்வ்' பிரிவில் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார். ------------


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:08 ரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

ரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

play button 00:36 குறுவை  சாகுபடிக்கு அமராவதி  அணை திறப்பு

குறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு

play button 00:26 எமனான மின்கம்பியால் பெண் பலி

எமனான மின்கம்பியால் பெண் பலி

play button 01:01 பூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை

பூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை

play button 00:42 சென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி

சென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி

play button 03:20 அஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்

அஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்

play button 00:31 பாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி

பாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி

play button 00:35 பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

play button 01:05 நெசவாளர் நலம் காக்க மாநாடு

நெசவாளர் நலம் காக்க மாநாடு

play button 00:32 பூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்

பூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்

play button 03:48 விவசாய  நிலத்தில்  மீன் பண்ணை

விவசாய நிலத்தில் மீன் பண்ணை

play button 00:32 அரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்

அரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்

play button 04:24 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:30 விபச்சார அழகிகள் கைது

விபச்சார அழகிகள் கைது

play button 00:48 திருவாரூரில் டெங்கு அறிகுறி

திருவாரூரில் டெங்கு அறிகுறி

play button 00:57 'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்

'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்

play button 02:35 விஜய் 65: பேரரசு விளக்கம்

விஜய் 65: பேரரசு விளக்கம்

play button 01:57 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:46 சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

play button 01:55 லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X