பொது » பசியாபுரத்தில் பழங்கால தண்ணீர் பானை அக்டோபர் 06,2018 00:00 IST
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மூன்று கட்ட அகழாய்வு பணி முடிந்த நிலையில், மாநில அரசு நிதியின் கீழ் நான்காம் கட்ட அகழாய்வு நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க அரியவகை பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீழடி அருகே பசியாபுரம் கிராம கண்மாயில், மூன்றடுக்கு வேலைப்பாட்டுடன் கூடிய பழங்கால உறை கிணறு மற்றும் உறை கிணற்றில் தண்ணீர் எடுக்க பயன்படும் பானை ஆகியவற்றை சிறுவர்கள் கண்டெடுத்தனர். இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து