பொது » நடிகை ராணி பாலியல் புகார் அக்டோபர் 15,2018 19:04 IST
நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்தவர் நடிகை ராணி. இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். திருவள்ளூர், செங்குன்றத்தில் உள்ள ஜவுளிக் கடையில் நடந்த படப்பிடிப்பில்,ராணியுடன் நடிகர் சண்முகநாதன் நடித்தார். அப்போது ராணிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட கணவர் பிரசாத்தையும் தாக்கியுள்ளார். இது தொடர்பாக ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சண்முகராஜன் விருமாண்டி, எம்டன் மகன், சண்டக்கோழி ஆகிய படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.
வாசகர் கருத்து