Advertisement

பொது » அமைச்சர் வீட்டு திருமணம்; கலகலக்கும் கரூர்! அக்டோபர் 21,2018 17:38 IST

பொது » அமைச்சர் வீட்டு திருமணம்; கலகலக்கும் கரூர்! அக்டோபர் 21,2018 17:38 IST

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் அக் ஷய நிவேதாவுக்கு, பூப்புனித நன்னீராட்டு விழா, கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் ஞாயிறன்று நடைபெறுகிறது. இதில், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, திங்களன்று, அமைச்சரின் தம்பி சேகரின் மகள், தாரணி - சிவா திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக, கரூரையே கலக்கும் வகையில், தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாக்களுக்காக ஒருலட்சம் பத்திரிகைகள் வழங்கியுள்ளனர். கரூர் முழுவதும், எந்தபக்கம் திரும்பினாலும், பிரம்மாண்ட 'கட் அவுட்'கள், பிளக்ஸ் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் என அமர்க்களப்படுத்தியுள்ளனர். முதல்வர் பங்கேற்கும் விழாவில், தனது செல்வாக்கை நிரூபிக்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழிற்சங்கத்தினர் என ஒரு லட்சம் பேரையாவது பங்கேற்க செய்ய அமைச்சர் திட்டமிட்டுள்ளார். அதற்காக, மக்களை அழைத்துவர 1,000 பஸ்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர தனியார் பள்ளிகள், கல்லூரிகள், டூரிஸ்ட் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருமணத்துக்கு அ.தி.மு.க.,வினர் வந்து செல்ல ஏதுவாக, சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை கரூருக்கு திருப்பிவிட வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் மீண்டும், தொழில் நகரங்களுக்கு திரும்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திங்களன்று அமைச்சரின் இல்ல திருமண விழாவுக்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் செல்வதால், சிறப்பு பேருந்துகளை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பணி மனைக்கு, 100 பேர் வீதம், திருமண விழாவில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளதால், கரூர் செல்லும் அனைத்து பஸ்களிலும், அண்ணா தொழிற்சங்கத்தினரே பயணிக்க முடிவு செய்துள்ளனர். விழா நடக்கும் கலையரங்கத்தில், 70 ஆயிரம் பேர் அமரும் வகையில், பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 50 ஆயிரம் பேர், 'பப்பே' முறையில் உணவு சாப்பிட, 62 அரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்று வகை இனிப்புகளுடன், சாப்பாடு, டிபன் வகைகள் சமைக்கப்படுகின்றன. இதற்காக மட்டுமே சில கோடிகள் செலவழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கரூரில் தன் அரசியல் பலத்தை நிரூபிக்கவும், செல்வாக்கை காட்டவும், தன் இல்ல விழாக்களை பிரம்மாண்டமாக நடத்துகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். கரூரில் கோலூச்சியிருந்த முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தினகரன் அணிக்கு சென்றுவிட்டார். கரூர் அரசியலில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டநிலையில், தமது வலிமையை காட்டவே இப்படியோரு பிரமாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் செய்துள்ளதாக அதிரணியினர் கூறுகின்றனர்.


play button 00:26 கழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்

கழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்

play button 02:12 ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது

ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது

play button 00:18 மாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி

மாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி

play button 00:21 மாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி

மாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி

play button 01:17 விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 04:49 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 04:05 நாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்!

நாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்!

play button 01:50 உங்கள் ஊர் இனி எந்த  மாவட்டம்?

உங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்?

play button 01:07 வலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்

வலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்

play button 03:49 காதலில் விழுந்த அமலாபால்

காதலில் விழுந்த அமலாபால்

play button 01:22 தங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு

தங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு

play button 00:42 நோ ஹெல்மெட் நோ என்ட்ரி

நோ ஹெல்மெட் நோ என்ட்ரி

play button 00:48 சைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு

சைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு

play button 12:40 சூர்யாவுக்கு கல்வியாளர் அட்வைஸ்

சூர்யாவுக்கு கல்வியாளர் அட்வைஸ்

play button 03:54 அமலா பால் ஆடையை  கிழிப்பது ஏன் ?

அமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் ?

play button 01:38 சந்தானம் படத்தை தடை செய்யணும்

சந்தானம் படத்தை தடை செய்யணும்

play button 01:08 இந்திய  விமானப்படை  சாகசம்

இந்திய விமானப்படை சாகசம்

play button 00:49 பயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்

பயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்

play button 00:27 மாவட்ட டேக்வாண்டோ போட்டி

மாவட்ட டேக்வாண்டோ போட்டி

play button 00:35 புலித்தோல் கடத்திய 5 பேர் கைது

புலித்தோல் கடத்திய 5 பேர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X