பொது » டெங்கு நோய் பாதிப்பு அக்டோபர் 23,2018 13:00 IST
தமிழகம் முழுதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் பிரிவில், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 40 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேருக்கு டெங்கு அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டு, சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து