Advertisement

அரசியல் » தப்பான வழியில் வேகம் பிடிக்கிறது பினராயி பயணம் அக்டோபர் 27,2018 10:00 IST

அரசியல் » தப்பான வழியில் வேகம் பிடிக்கிறது பினராயி பயணம் அக்டோபர் 27,2018 10:00 IST

சரணம் அய்யப்பா என்று கோஷம் போட்டவர்களை எல்லாம் கேரளா அரசு கைது செய்வதை ஐகோர்ட் கடுமையாக கண்டித்துள்ளது. “என்ன நினைத்து கொண்டிருக்கிறது இந்த அரசு? ரோட்டுக்கு வந்து கோஷம் போட்டவர்கள், அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் என்று சகட்டுமேனிக்கு பொதுமக்களை கைது செய்தால் கோர்ட் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?” என்று காட்டமாக கேட்டனர் நீதிபதிகள். “ஒருவர் வன்முறையில் ஈடுபட்டார் என்பது விசாரணையில் ஊர்ஜிதம் ஆனால் மட்டுமே அவரை கைது செய்ய வேண்டும். யாரையோ திருப்தி செய்வதற்காக கண்ணில் பட்டவர்களை எல்லாம் கைது செய்தால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்!” என்று பினராயி விஜயன் அரசை எச்சரித்தது ஐகோர்ட். பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 2 பக்தர்கள் “எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் அமைதியாக நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக போலீஸ் கைது செய்திருக்கிறது” என்று வழக்கு தொடர்ந்தனர். நாம ஜெப யாகம் என்ற பெயரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் அய்யப்ப சரண கோஷம் மட்டுமே எழுப்பினர். அவர்களில் பலரை வீடியோவில் அடையாளம் கண்டு கைது செய்த போலீஸ், என்ன வழக்கு போடலாம் என்று அதன் பிறகுதான் யோசித்து வருவதாக கோர்ட்டில் பக்தர்கள் முறையிட்டனர். இதுவரை 2,061 பேரை கைது செய்துள்ள போலீஸ் வீடுவீடாக சென்று அடுத்து நீதான்; ரெடியாக இரு என்று பூச்சாண்டி காட்டிவிட்டு செல்கிறது. மத நம்பிக்கை இல்லாத மார்க்சிஸ்ட் கட்சியினரை கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்களுக்கு எதிராக ஏவிவிட்டு மிகப்பெரிய அளவில் கலவரத்தை தூண்டிவிட ஆளும் கட்சி உயர் மட்டத்தில் சதி திட்டம் தீட்டுவதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன. இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோயில் பொது இடம்; யார் வேண்டுமானாலும் அங்கே செல்லலாம் என்று முதல்வர் பினராயி விஜயன் சொன்னதற்கு அய்யப்ப பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில்தான் விஜயன் அவ்வாறு சொன்னார் என்றாலும், சபரிமலை கோயிலின் செல்வாக்கை அழிக்கும் விதமாக விஜயன் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் மக்களின் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. “சபரிமலை கோயிலின் சொந்தக்காரர் சுவாமி அய்யப்பன் மட்டுமே. கேரள தேவஸ்வம் போர்டு என்பது அரசின் ஒரு அமைப்பு. அது அறக்கட்டளை மாதிரியானது; அதிகாரம் இல்லாதது. அதன் மூலமாக கோயிலை கைப்பற்ற அரசு நினைக்கிறது” என்று ஆன்மிக ஆர்வலர் பத்மா பிள்ளை கூறினார். பந்தளம் மகாராஜா குடும்பம், சபரிமலை கோயில் மேல் சாந்தி ஆகியோரும் விஜயன் அரசுக்கு எதிராக திரும்பியதால் இதுவரை இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நின்ற பெரும்பான்மையான இந்துக்களும் அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க ஆரம்பித்துள்ளனர். மண்டலபூஜை காலத்தில் தற்காலிக ஊழியர்கள் என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் 2,000 பேரை சபரிமலை முகாம்களில் தங்கவைக்க விஜயன் அரசு திட்டம் போட்டிருப்பதும் மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:11 லித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது?

லித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது?

play button 00:55 கிருஷ்ணர் பற்றி  இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்

கிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்

play button 03:56 கிண்டி  எஸ்டேட்டுக்கு ஜின்பிங்  வருவாரா?

கிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா?

play button 01:06 இன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்

இன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்

play button 04:57 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:18 சிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்

சிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்

play button 01:35 நீலகிரியில் தட்டியெறியும் மழை

நீலகிரியில் தட்டியெறியும் மழை

play button 00:30 பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

play button 02:24 'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா

'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா

play button 01:32 விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:08 ஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு

ஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு

play button 02:54 திருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்

திருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்

play button 02:56 ரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை

ரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை

play button 00:24 மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி

மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி

play button 00:43 மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி

play button 00:53 ஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை

ஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை

play button 00:26 காதுகேளாதோர் தடகள போட்டி

காதுகேளாதோர் தடகள போட்டி

play button 00:33 ஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்

ஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்

play button 01:03 கடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை

கடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை

play button 00:49 அரசு திட்டங்களை திணிக்கக் கூடாது

அரசு திட்டங்களை திணிக்கக் கூடாது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X