Advertisement

பொது » மத்திய அரசு ரிசர்வ் பேங்க் போர் தீவிரம்! சீரியஸ் நேயர்களுக்கு மட்டும் அக்டோபர் 31,2018 17:00 IST

பொது » மத்திய அரசு ரிசர்வ் பேங்க் போர் தீவிரம்! சீரியஸ் நேயர்களுக்கு மட்டும் அக்டோபர் 31,2018 17:00 IST

சுயாட்சி அதிகரம் கொண்ட ரிசர்வ் பேங்கை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பேங்க் மற்றும் தொழில் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவின் வங்கித்துறையை வழி நடத்துவது ரிசர்வ் பேங்க். அதன் கவர்னரை நியமிப்பது பிரதமரும் நிதி அமைச்சரும்தான் என்றாலும் சுயாட்சி அமைப்பான RBI மீது அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக ரிசர்வ் பேங்கை அதன் பாதையில் இருந்து பிறழ வைக்க அரசு தீவிரம் காட்டுவது அந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து நடந்து வரும் ஒரு அத்துமீறல். குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய ஆண்டில் அரசு தலையீடு அதிகமாக இருக்கும். தொழில் அதிபர்களுக்கும் சராசரி மக்களுக்கும் தாராளமாக கடன் கொடுக்க அரசு கட்டாயப்படுத்தும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் இது அதிகமாகவே நடந்தது. ஆனால் அவ்வறு விதிகளை மீறி வழங்கப்பட்ட தாராள கடன்கள் திரும்ப வந்து சேராமல் வராக் கடனாக மாறியதால் பேங்குகள் நஷ்டப்பட்டன. பல தொழிலதிபர்கள் நாட்டை விட்டே ஓட்டம் பிடித்த கதைகளை பார்த்தோம். மோடி பிரதமரான பிறகு இத்தகைய அரசியல் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அல்லது வைக்க முயன்றார். என்றாலும், தொழில் அதிபர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசும் பொருளாதாரத்தை மேம்படுத்த இயலாது என்பதால்.. ஒரு பக்கம் சீர்திருத்தம் நடக்கும்போதே இன்னொரு பக்கம் விதி மீறல் நிர்பந்தமும் நீடித்தது. ரகுராம் ராஜன் போன்ற உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களால்கூட ரிசர்வ் பெங் கவர்னர் பதவியில் திருப்தியாக செயல்பட முடியாத நிலை உண்டானது. இப்போது அந்த சிக்கல் முற்றி இருக்கிறது. ரகுராமுக்கு பிறகு மோடியால் தேர்வு செய்யப்பட்ட ரிசர்வ் பேங்க் கவர்னரும் போர்க்கொடி தூக்குகிறார். தொழில்துறை பல திசையிலும் தவிப்பதால் கடன் வழங்குவதற்கான விதிகளை தளர்த்துமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. அப்படி தாராளமாக கொடுத்து கொடுத்துதானே வராக்கடன் மலையாக பெருகி நெருக்கடி ஏற்பட்டது? அதில் இருந்து மீண்டு வரும்போது திரும்பவும் பேங்குகளை புதைகுழியில் தள்ளலாமா? என்று ரிசர்வ் பேங்க் கேட்கிறது. குறிப்பாக, IL&FS என்று சுருக்கமாக சொல்லப்படும் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் லீசிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் என்கிற நிறுவனம் பெரும் நெருக்கடியில் வீழ்ந்த பிறகு ரிசர்வ் பேங் மீதான் அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த IL&FS ஒரு நிழல் பேங்க் மாதிரி. எல் ஐ சி, ஸ்டேட் பேங்க், எச் டி எஃப் சி, சென்ட்ரல் பேங்க் தொடங்கி ஜப்பான், அபுதாபி அரசுகள் வரை இதில் கணிசமாக முதலீடு செய்துள்ளன. சுமார் 170 துணை நிறுவனங்களை கொண்ட IL&FS நாட்டின் மிகப்பெரிய கட்டுமான திட்டங்கள், சாலைகள், போக்குவரத்து என பலவகையிலும் பெரும் தொகைகளை கடனாக கொடுத்துள்ளது. இவற்றில் பல திட்டங்கள் பல காரணங்களால் முடங்கி கிடப்பதால் கடன் தவணையோ வட்டியோ திரும்பி வரவில்லை. இதனால் நிறுவனம் மற்றவர்களுக்கு தர வேண்டிய டிவிடெண்ட் முதலான எந்த தொகையையும் கொடுக்க இயலாத நிலை வந்துவிட்டது. காலம் கடந்த கமிட்மென்டுகளின் மதிப்பு 30 முதல் 40 ஆயிரம் கோடி என்கிறார்கள். நூற்றுக்கணக்கான திட்டங்களும் நிறுவனங்களும் மட்டுமின்றி வங்கிகளின் கடன்களூம் இதோடு பின்னி பிணைந்திருப்பதால் இந்த சிக்கல் நாடளாவிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. ஆகவேதான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ரிசர்வ் பேங்கை மிகவும் நெருக்குகிறார். அவருக்கு இன்னொரு கோபமும் இருக்கிறது. ரிசர்வ் பேங்கிடம் மூன்றரை லட்சம் கோடிக்கு மேல் உபரி ரொக்கம் குவிந்து கிடக்கிறது. அதில் கொஞ்சத்தை எனக்கு கொடுத்தால் நிதி பற்றாக்குறையை சமாளித்து மக்கள் நல திட்டங்களுக்கு அள்லி கொடுப்பேனே என்று பதவிக்கு வந்ததில் இருந்தே ஜேட்லி கெஞ்சியும் மிரட்டியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ரிசர்வ் பேங்க் கவர்னர் அசைந்து கொடுக்க மறுக்கிறார். கவர்னர்களை மாற்றினாலும் ஜேட்லியின் கவலை தீரவில்லை. இந்த பின்னணியில்தான் சுதந்திரம் அடைந்த இத்தனை வருடங்களில் பயன்படுத்தாத ஒரு விதியை முதல் முறையாக பிரயோகம் செய்து ரிசர்வ் பேங்குக்கு செக் வைக்கிறார் அருண் ஜேட்லி. ரிசர்வ் பேங்கின் சுயாட்சி அதிகாரத்தில் அரசு தலையிட்டால் அதற்கான விலையை அந்த ஆட்சியாளர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என்று ஆர் பி ஐ துணை கவர்னர் ஆச்சாரியா பேசினார். கவர்னர் உர்ஜித் படேல் ஆசியுடந்தான் அவர் பேசினார் என்பதையும் அவரே தெளிவுபடுத்தி விட்டார். அரசாங்கம் நடத்தும் ஆளும் கட்சி எப்போதும் ஏதாவது தேர்தலை சந்திக்கும்; அதற்காக சில கொள்கை முடிவு எடுக்கும். அதெல்லாம் டி20 மேச் ஆடுவது மாதிரி. நாங்கள் அதாவது ரிசர்வ் பேங் ஆடுவது டெஸ்ட் மேச். நீண்டகால திட்டங்கள், நாட்டு நலனை மனதில் கொண்டு பொருமையாக நின்று ஆடுகிறோம் என்று வேறு உதாரணம் எல்லாம் சொன்னார் துணை கவர்னர். கிரிக்கெட் ரசிகரான ஜேட்லிக்கு தாங்கவில்லை. நாட்டுக்கு பெரிய நெருக்கடி வரும்போது ரிசர்வ் பேங்குக்கு அரசு ஆலோசனை கூறலாம்; அதற்காக ஒரு கமிட்டியை அமைக்கலாம் என்கிற இதுவரை பயன்படுத்தாத விதியை கையில் எடுத்து சரசரவென்று கட்டளைகளை பிறப்பித்துள்ளார் ரிசர்வ் பேங்க் கவர்னர் உர்ஜித் படேலுக்கு. சர்தார் படேலின் உலகப்பெரிய சிலை திறப்பு நாளில் மும்பய், டெல்லியில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் உர்ஜித் படே ராஜினாமா செய்ய போகிறாரா அல்லது ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டாரா என்பதுதான்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:29 வளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்

வளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்

play button 01:57 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:46 சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

play button 01:55 லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

play button 01:45 விக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு

விக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு

play button 03:56 நாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு  பேட்டி

நாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி

play button 00:33 சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு

சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு

play button 18:34 நாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா

நாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா

play button 01:28 இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்

இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்

play button 00:40 மழை சென்னையில் டிராபிக் ஜாம்

மழை சென்னையில் டிராபிக் ஜாம்

play button 00:57 சர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி

சர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி

play button 00:40 முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

play button 00:50 உப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்

உப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்

play button 03:00 சைரா டிரைலர்

சைரா டிரைலர்

play button 02:09 ஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு

ஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு

play button 00:36 கார்-லாரி மோதல் இருவர் பலி

கார்-லாரி மோதல் இருவர் பலி

play button 01:46 இருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி

இருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி

play button 00:25 சந்தன குட விழா

சந்தன குட விழா

play button 01:45 புதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்

புதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்

play button 00:40 பொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி

பொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X