Advertisement

அரசியல் » உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைசேர்த்த படை வீரர்கள் எல்லையில் மோடி எழுச்சி உரை நவம்பர் 08,2018 17:00 IST

அரசியல் » உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைசேர்த்த படை வீரர்கள் எல்லையில் மோடி எழுச்சி உரை நவம்பர் 08,2018 17:00 IST

நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்வையும் அளிக்க தீபாவளியை எல்லைக்கே சென்று கொண்டாடுவதை பிரதமர் மோடி வாடிக்கையாக வைத்திருக்கிறார். நரேந்திர மோடி பிரதமர் இம்முறை உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள இந்தோ -சீனா எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். இதன்மூலம் தொடர்ந்து 5வது ஆண்டாக வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியிருக்கிறார். வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி விட்டு, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறகு அவர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார். உயர்ந்த பனி மலையின் உச்சியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் உங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள். நாட்டின் நலனுக்காக உங்கள் வாழ்க்கையை நீங்கள் தியாகம் செய்திருக்கிறீர்கள். தீபாவளி தனிச்சிறப்பு வாய்ந்த பண்டிகை. உங்களை பெற்றெடுத்த உங்கள் பெற்றோர்கள் நாட்டை பாதுகாக்கும் பணியை ஏற்கும்படி, உங்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள். ஆகவே, 
அவர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். அதனால்தான் வீரர்களுடன் தீபாவளி கொண்டாட நான் விரும்புகிறேன். நாட்டை வலிமையாக வைத்திருக்கும் நோக்குடன் நீங்கள் நமது எல்லையை பாதுகாத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு முனையில் உள்ள எல்லையை மட்டும் பாதுகாக்கவில்லை; எல்லையை பாதுகாப்பதன்மூலம் 125 கோடி மக்களின் உயிரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள்; 125 கோடி இந்தியர்களின் கனவுகளை, எதிர்காலத்தை காத்துக் கொண்டிருக்கிறீர்கள். நமது நாட்டில் தீபாவளியை மிகுந்த ஆரவாரத்தோடு கொண்டாடப்படாத பகுதிகளே இருக்க முடியாது. இது, தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பண்டிகை. இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு செல்லும் தீப விழா இது. எதிர்மறையான செயல்பாடுகளை இந்த வெளிச்சம் அகற்றி விடும். வெளிச்சத்தில் அச்சமின்றி இருப்பது ஒரு வரம். வலியை ஏற்றுக்கொண்டு வீரத்துடன் இந்த நாட்டை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். உங்கள் தைரியம் நாடு முழுக்க பரவுகிறது. தீப விளக்கு எப்படி எரிந்து உலகுக்கு வெளிச்சத்தைத் தருகிறதோ; அதேபோல, மக்கள் மனங்களில் அச்சத்தை அகற்றி பாதுகாப்பான உணர்வை பரப்ப நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை வீரர்களுடன் எனக்கு நீண்ட கால உறவு இருக்கிறது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை பாதை பக்தர்களுக்கு திறக்கப்பட்டபோதே நான் புனிதப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். யாத்திரை செல்லும்போது எல்லை போலீஸ் படை வீரர்கள் எங்களுக்கு உதவுவது வழக்கம். வீரர்களின் செயல்பாடு என்னை உண்மையிலேயே கவர்ந்திழுத்தது. தனிப்பட்ட முறையில் எங்களை அவர்களுக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தாராளமாக உதவி செய்வார்கள். சில நேரங்களில் எங்கள் உடமைகளை சுமப்பார்கள். யாராவது ஒரு யாத்ரீகர் உடல்நலம் குன்றினால் அவர்களுக்கு உதவ மேலும் கீழுமாக அவர்கள் ஓடுவார்கள். சிவனைப் போற்றி வீரர்கள் பாடல் பாடும்போது அந்த இடத்தின் சூழலே முற்றிலும் மாறி விடும். இந்தோ திபெத் குடும்பத்தின் ஒரு அங்கமாக நாங்கள் ஆகி விட்டோம். நமது நாட்டின் வீரர்கள் தொடர்ச்சியாக தடைகளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இளமையை நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். ராணுவத்தை விட்டு வீரர்கள் ஓய்வுபெறும்போது அவர்கள் புதிய எல்லைகளை அடைய வேண்டும்; அதற்காக ராணுவம் அவர்களை தயார்படுத்த வேண்டும்; அந்த வகையில் அவர்கள் வாழ்க்கையில் புதிய உச்சத்தைத் தொட அரசு தொடர்ந்து திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. நான் ஆர்.எஸ்.எஸ்.,சுக்காக பணியாற்றியபோது, படை வீரர்களுடன் உரையாடும் வாய்ப்பை பல முறை பெற்றிருக்கிறேன். அப்போது ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் பற்றி நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வப்போது வரும் அரசுகளிடம் அவர்கள் கோரிக்கை வைப்பது வழக்கமாக இருந்தது. நீதி கேட்டு அவர்கள் கோரிக்கை வைத்தும் இந்தப் பிரச்னை தீர்க்கப்படாமலே இருந்தது. ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தில் பல சிக்கல்கள் இருந்தன. அந்த திட்டத்துக்காக, முந்தைய அரசு, 500 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தது. அந்த நிதியைக் கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்று அனைவரும் நினைத்தனர். எங்கள் அரசு அமைந்ததும் இதற்காக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கினோம். இந்நிதியை நான்கு பகுதிகளாக பிரித்து வழங்க தீர்மானித்தோம். வீரர்களுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவைத் தொகையில் 11 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கி விட்டோம். நமது படை வீரர்களின் கடமை உணர்வுக்கும், அவர்களது செயல்பாட்டுக்கும் உலகம் முழுவதுமிருந்தும் பாராட்டு கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை தேடிந்தந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வீரர்களுக்கு முக்கியம் என்னவென்றால் ஒழுக்கம், கலாச்சாரம், அர்ப்பணிப்பு. நான் சந்தித்த உலக தலைவர்கள் எல்லாம் நமது படைகளுக்கு புகழாரம் சூட்டினர். இது எனக்கு பெருமிதத்தை தந்தது. நிலம், கடல், ஆகாய மார்க்கம் வழியாக அணுஆயுத தாக்குதல்களை நடத்தக் கூடிய திறன் பெற்ற நான்கு ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வலிமையான நாடாக இருக்க வேண்டும். எல்லா வளமும் பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மீண்டுமொருமுறை தீபாவளி வாழ்த்துக்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கூறிக்கொள்கிறேன். என்னோடு சேர்ந்து சொல்லுங்கள். பாரத் மாதா கீ ஜே.. வந்தே மாதரம்...


play button 02:43 பந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்

பந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்

play button 00:34 குட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி

குட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி

play button 02:15 செங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல

செங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல

play button 00:22 மழைக்காக சிறப்பு தொழுகை

மழைக்காக சிறப்பு தொழுகை

play button 01:26 தண்ணீர்  தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள்  உதவலாமே....

தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....

play button 01:18 5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்

5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்

play button 17:59 லேடி சமுத்திரக்கனியா? ஜோதிகா பதில்

லேடி சமுத்திரக்கனியா? ஜோதிகா பதில்

play button 02:41 மெட்ரோ ஸ்டேஷன் பாதுகாப்பு கேள்விக்குறி | Chennai Metro Train Security Lapses | Dinamalar

மெட்ரோ ஸ்டேஷன் பாதுகாப்பு கேள்விக்குறி | Chennai Metro Train Security Lapses | Dinamalar

play button 04:51 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-06-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-06-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:25 விவசாயத்துடன் பள்ளிப்படிப்பு

விவசாயத்துடன் பள்ளிப்படிப்பு

play button 01:59 குரங்குகளின்  காவலர்கள்!

குரங்குகளின் காவலர்கள்!

play button 00:48 அகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்

அகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்

play button 03:42 மூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice

மூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice

play button 01:07 கோர்ட்டில் பெண்ணை அடித்த  வக்கீலால் பரபரப்பு

கோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு

play button 00:41 வாலிபால்: கோவை அணி முதலிடம்

வாலிபால்: கோவை அணி முதலிடம்

play button 00:38 மின்வாரிய ஊழியர்கள் விளையாட்டு

மின்வாரிய ஊழியர்கள் விளையாட்டு

play button 00:52 அத்தி வரதர் திருவிழா  பணிகள் மந்தம்

அத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்

play button 01:13 விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

play button 04:22 பிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா?

பிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா?

play button :28 மழை வேண்டி  சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)

மழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X