Advertisement

சிறப்பு தொகுப்புகள் » ரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? நவம்பர் 16,2018 19:00 IST

சிறப்பு தொகுப்புகள் » ரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? நவம்பர் 16,2018 19:00 IST

ரயில்வேயில் பார்சல் ஊழல் நடப்பது அம்பலமாகியுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 8ம்தேதி 30 பார்சல்களை, திருப்பூர் ஜவுளி நிறுவனம் கொல்கத்தாவுக்கு அனுப்ப புக் செய்தது. 30 பார்சல்களும் போய்ச் சேர்ந்ததாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 11 பார்சல்கள் பிளாட்பார்மில் கிடந்தன. கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஏதோ தப்பு நடக்கிறது என்பதை உணர்ந்தார். 11 பார்சல்களையும் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். ஒரு யூனியனை சேர்ந்த பார்சல் ஊழியர்கள் அங்கு சென்று, சூப்பர்வைசரை மிரட்டி 11 பார்சல்களையும் தூக்கிச் சென்றனர். விவகாரம் பெரிதானது. உயரதிகாரிகள் வந்தனர். 30 பனியன் பார்சல்களையும் கொல்கத்தாவுக்கு அனுப்பிவிட்டோம் என்று ஊழியர்கள் சாதித்தனர். தீவிரமாக விசாரித்தபோதுதான் பார்சல் முறைகேடு அம்பலமானது. பார்சல் முறைகேடு எப்படி நடக்கிறது? சரக்கு பார்சல்களை பார்சல் ஏஜெண்ட் புக் செய்வார். 10 பார்சல்களை கொண்டு வருவார். ஆனால், 5 பார்சல்களுக்கு மட்டுமே அதிகாரிகள் பில் போடுவர். பிறகு, இரண்டு ஐந்து பார்சல்களாக பிரித்து காலை, மாலை என, அடுத்தடுத்த ரயில்களில் அனுப்புவர். (உதாரணத்துக்கு, ஒரு பார்சலுக்கு கட்டணம் 200 ரூபாய் என்றால், 10 பார்சல்களுக்கு கட்டணம் 2,000 ரூபாய். 5 பார்சல்களுக்கான கட்டணம் 1,000 ரூபாய்க்கு பில் போட்டுவிட்டு, எஞ்சிய 1,000 ரூபாயை ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார், பார்சல் ஏஜென்ட்கள் பங்கு போட்டுக் கொள்வர். சரக்கு போய்ச்சேரும் ரயில் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள், RPF போலீசுக்கும் உரிய பங்கு போய் விடும்) (கார்டு) பார்சல் ஊழல் எப்படி நடக்கிறது? ----------------- ஒரு பார்சலுக்கு கட்டணம் 200 ரூபாய் 10 பார்சல்களுக்கு கட்டணம் 2,000 ரூபாய் 5 பார்சல்களுக்கு மட்டும் 1000 ரூபாய் பில் போடுவர் எஞ்சிய 5 பார்சல்களுக்கான கட்டணம் 1000 ரூபாய் ஸ்வாஹா ரயில்வே அதிகாரிகள் RPF போலீசார் பார்சல் ஏஜெண்ட் பங்கு போடுவர். இப்படியாக, ஒவ்வொரு ரயிலிலும் நடக்கும் பார்சல் முறைகேடுகளை கணக்கிட்டால் மலைப்பை ஏற்படுத்தும். பார்சல் மூலம் ஒருநாளைக்கு ரயில்வேக்கு 50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்கிறது புள்ளி விவரம். ஆக, ரயில்வேக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான வருவாய் சில கறுப்பாடுகளை போய்ச்சேருகிறது. இதே பாணியில்தான் பனியன் பார்சல்களை அனுப்புவதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. இதுதொடர்பாக, டிக்கெட் பரிசோதகர் யுவராஜ் உள்ளிட்ட 5 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். யுவராஜ், எஸ்.ஆர்.எம்.யூ., பொதுச்செயலாளர் என்.கண்ணையாவின் உறவினர் என்பதால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய தெற்கு ரயில்வே தலைமைக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வருகிறதாம். அதன் பிறகே பார்சல் முறைகேடு பல பெரும்புள்ளிகளின் பின்புலத்தோடுதான் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேர்மையான விசாரணை நடத்தப்பட்டால் பல புள்ளிகள் சிக்கும் என நேர்மையான ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர்.


play button 00:52 பொம்மை  பூ போடும்  நிகழ்ச்சி

பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

play button 00:47 சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை

சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை

play button 00:47 சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை

சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை

play button 00:42 கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை

play button 01:00 நகரத்தார் குலதெய்வ வழிபாடு

நகரத்தார் குலதெய்வ வழிபாடு

play button 03:45 சிவகார்த்திகேயன் ஓட்டளித்தது சர்ச்சையானது

சிவகார்த்திகேயன் ஓட்டளித்தது சர்ச்சையானது

play button 01:05 ராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு

ராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு

play button 01:13 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-04-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-04-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:36 வாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்

வாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்

play button 04:50 திறன் வளர்ப்பில்  தமிழகம் முன்னோடி

திறன் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி

play button 00:47 குழந்தை பலி உறவினர்கள்  மறியல்

குழந்தை பலி உறவினர்கள் மறியல்

play button 00:15 அரசனூரில் காற்று: வாழைகள் சேதம்

அரசனூரில் காற்று: வாழைகள் சேதம்

play button 01:26 அழகர்கோவில் சேர்ந்தார் கள்ளழகர்

அழகர்கோவில் சேர்ந்தார் கள்ளழகர்

play button 01:21 கத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்

கத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்

play button 01:31 பொன்பரப்பி  கலவரம் பா.ம.க புகார்

பொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்

play button 01:09 திமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை

திமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை

play button 01:08 அனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்

அனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்

play button 00:21 தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

play button 00:37 சித்திரை  திருவிழா தெப்போற்சவம்

சித்திரை திருவிழா தெப்போற்சவம்

play button 00:50 அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X