பொது » மின் கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிப்பு நவம்பர் 19,2018 20:00 IST
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நவம்பர் 30-ம்தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் கட்டணத்தை செலுத்த நவம்பர் 25ம்தேதி கடைசி தேதி. ஐந்து நாள் கால அவகாசத்தை நீட்டிப்பதால், எங்களின் வாழ்வாதாரம் மீண்டும் கிடைத்து விடுமா? என, புயல் பாதித்த மாவட்ட மக்கள் ஆவேசத்துடன் கேட்கின்றனர். புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார சப்ளை சீராகவே ஒரு வார காலமாகும் என, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
வாசகர் கருத்து