பொது » மின் கட்டணம் வராது டிசம்பர் 04,2018 15:00 IST
நாகை, குறிச்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2255 பேருக்கு 27 வகையான நிவாரணப் பொருட்களை தமிழக அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ எஸ் மணியன் ஆகியோர் வழங்கினர். பின்னர் பேசிய உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மின்கட்டணம் கிடையாது என்றும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பேசி வருவதாகவும் தெரிவி்த்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஓ. எஸ் .மணியன், கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின் கட்டணத்திற்கான ரசீது அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் மின் ஊழியர்கள் மறு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், கணக்கெடுப்பு பணி தற்போது நடைபெறவில்லை என தெரிவித்தார்.
வாசகர் கருத்து