பொது » நள்ளிரவில் உதவிய புதுச்சேரி முதல்வர் டிசம்பர் 05,2018 12:00 IST
புதுச்சேரி, அரியாங்குப்பம் மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். செவ்வாயன்று நள்ளிரவு, இவரது வீட்டிற்குள் ஐந்து அடி நீளமுள்ள விஷபாம்பு வந்தது. உயிருக்குப் பயந்து வனத்துறைக்குத் தகவல் அளிக்க பலமுறை தொடர்பு கொண்டும் எவரும் போனை எடுக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர்கள் முதல்வர் நாராயணசாமியை மொபைல்போனில் தொடர்புக் கொண்டு முறையிட்டனர். உடனே முதல்வர் நாராயணசாமி, வனத்துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு விஷ பாம்பைப் பிடிக்க வலியுறுத்தினார். உடன் வந்த வனத்துறை ஊழியர்கள் கோபி மற்றும் தாமரைச்செல்வன் ஆகியோர் விஷபாம்பை பிடித்துச் சென்றனர். நள்ளிரவு என்று பாராமல் மூன்று உயிர்களைக் காக்க உதவிய முதல்வருக்கு விஜயாவும் அவரது பிள்ளைகளும் நன்றி தெரிவித்தனர்.
வாசகர் கருத்து