பொது » புயல் நிவாரணம் : வி.ஏ.ஓ.,க்கள் சாதனை டிசம்பர் 06,2018 00:00 IST
புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களுடைய 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேசிய, கிராம நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் ரெனா, மின்வாரிய ஊழியர்களை விட, கிராம நிர்வாக அலுவலர்கள், கஜா புயல் நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்துள்ளதாக, கூறினார். இதே போல, தேனி மாவட்டம் பெரியகுளம் தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு பொராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து