Advertisement

சிறப்பு தொகுப்புகள் » மேகேதாடு அணையை எதிர்ப்பது சரியா? டிசம்பர் 07,2018 18:00 IST

சிறப்பு தொகுப்புகள் » மேகேதாடு அணையை எதிர்ப்பது சரியா? டிசம்பர் 07,2018 18:00 IST

மேகதாதுவே தப்பு. மேகேதாடுதான் கரெக்டாம். மேகேன்னா ஆடு, தாடுன்னா தாண்டுறது. வேண்ணா ஆடுதாண்டி அணைன்னு தமிழ்ல மாத்திக்கலாம். ஆடு எவ்ளோ உசரம் தாண்டிர போகுது? தடுப்பணைங்றதால அந்த பேர் சூட் ஆகுது. அங்க அணை கட்ட கர்நாடகா முன்னாடியே திட்டம் போட்டுது. காவிரி கேஸ் இழுத்துகிட்டே போனதால நடக்கல. காங்கிரஸ் சீயெம் சித்தராமய்யா 2015 ல அணை கட்ற ஒப்புதல் குடுத்தார். ஆனா 2018 பெப்ரவரில சுப்ரீம் கோர்ட் ஃபைனல் ஜட்ஜ்மென்ட் வந்துதும் எல்லாமே மாறி போச்சு. மேலாண்மை ஆணையமும் ஒழுங்காற்று குழுங்ற ரெகுலேட்டரி போர்டும் அமைச்சதால காவிரி மேல கர்நாடகாவுக்கு இருந்த ஹோல்டு போயிருச்சு. அணைகள் சம்பந்தமான உரிமை அதிகாரம்லாம்கூட மாநில அரசுகள் கையவிட்டு போயாச்சு. முழு அதிகாரம் இருக்ற காவிரி அதாரிட்டி, ரெகுலேட்டரி போர்டு இந்த ரெண்டுலயும் காவிரி தண்ணிய யூஸ் பண்ற 4 மாநிலங்களோட பிரதிநிதிகள் இருக்காங்க. அந்த அமைப்புகள் வேலைய தொடங்கிருக்கு. அதோட மேகேதாடு பிரச்னையும் கிளம்பிருக்கு. அந்த தடுப்பணைய கட்றதுக்கான டீடெய்ல்டு ரிப்போட் தயாரிக்க கர்நாடகாவுக்கு பெர்மிஷன் கிடைச்சிருக்கு. யார் குடுத்தது பெர்மிஷன்? மத்திய நீர் ஆணையம் குடுத்திருக்கு. அது எப்டி குடுக்க முடியும்? எப்டின்னா, மத்திய நீர் ஆனையம், காவிரி நீர் ஆணையம் இந்த ரெண்டுக்கும் ஒரே ஆள்தான் தலைவர். அவர் பேரு மசூத் உசேன். மத்திய ஆணையத்தோட தலைவர்ங்ற பேர்ல கர்நாடகாவுக்கு பெர்மிஷன் குடுத்தார். காவிரி ஆனையத்தோட தலைவர்ங்ற பேர்ல நம்மகிட்ட சொன்னாரு, யார் பெர்மிஷன் குடுத்தாலும் சரி, காவிரி ஆணையத்தோட சம்மதம் இல்லாம அணை கட்ட முடியாதுன்னார். அடடா, இவரு அம்பியா ரெமோவா தெரியலையேனு ஸ்டாலினே கொழம்பிட்டார். ஆனா உசேன் ஒரு பதில் வச்சிருக்கார். “தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரிக்கு குடுத்தது போக உபரியா இருக்ற தண்ணிய அதாவது வீணா கடல்ல கலக்ற தண்ணிய தேக்கி வைக்றதுக்குதான் மேகேதாடு தடுப்பணைனு சொல்லுது கர்நாடகா அரசு. அதுல எந்த தப்பும் இருக்றதா தெரியலையே”னு உசேன் பாய் சொல்றார். இதே பிரச்னை முன்னாடி சுப்ரீம் கோர்ட்ல வந்தப்ப, “எல்லாருக்கும் அவங்கவங்க பங்க குடுத்த பிறகு எக்சசா இருக்ற தண்ணிய கர்நாடகா சேமிச்சு வைக்றதுல என்ன ப்ராப்ளம்?”னு ஜட்ஜ்ங்க கேட்டாங்க. நம்ம எதிர் கட்சிகளே அப்டி கேட்ருக்கு. விவசாயிகளும் கேட்டாங்க. “ஜூன், ஜூலை மாசத்துல 90 டி எம் சி க்கு மேல காவிரி தண்ணி வீணா போய் கடல்ல கலந்திருக்கு. கால்வாய், ஏரி, குளங்கள மழைக்கு முன்னாடியே தூர்வாரி இருந்தா இப்டி ஆயிருக்குமா?”னு ஸ்டாலின் கேட்டார். மினிஸ்டர் ஜெயகுமார் டென்சன் ஆயிட்டார். “கருணாநிதி முதல்வராக இருந்த 2000 ம் ஆண்டில் 385 டி எம் சி, 2008 ல் 114 டி எம் சி காவிரி தண்ணீர் கடலில் கலந்ததை ஸ்டாலின் மறந்துவிட்டாரா?”னு கேட்டார். இங்க எப்பவும் இந்த கதைதான. இவங்க அவங்கள சொல்லுவாங்க. அவங்க இவங்கள சொல்லுவாங்க. வீணா போற உபரி நீர சேமிக்க எந்த திட்டமும் நம்மகிட்ட இல்ல. “அதுக்கான திட்டங்கள் 4735 கோடி செலவுல நடக்குது”னு எடப்பாடி சொன்னார். ”சரி, அதெல்லாம் இப்ப எந்த நிலைமைல இருக்கு?”னு ஸ்டாலின் கேட்டார். இதுவரைக்கும் பதில் வரல. வேலைகள் ரகசியமா நடக்குது போல. காவிரி டெல்ட்டானு சொல்ற பகுதில நிறைய கிளை நதிகள், காட்டாறுகள், சிற்றாறுகள், கால்வாய்கள் இருக்கு. எல்லாத்தையும் சேத்தா நீர்வழியின் மொத்த தூரம் 26,000 மைல். ரொம்ப காலத்துக்கு முன்னால உருவாக்கின பாசன கட்டமைப்பு இந்த கால்வாய்கள்லாம். இப்ப காலம் மாறியிருக்கு, தேவைகளும் மாறி இருக்கு. இதுக்கு ஏத்த மாதிரி மாடர்னா வாட்டர் ஃப்ளோ கன்ட்ரோல் சிஸ்டம் எதுவும் இல்ல. அதுபோக நீர்நிலைகள் எல்லாத்துலயும் ஆக்கிரமிப்பு. கோர்ட் ஸ்ட்ராங்கா ஆர்டர் போட்டாலும் க்ளியர் பண்ண முடியல. ஆயிரம் ஏரிகள், நிறைய குளங்கள் இருக்கு. ஆக்கிரமிப்புகள அப்புற படுத்தி இதெல்லாம் தூர் வாரணும். பெரிய பப்ளிசிட்டியோட அந்த வேலைகள்லாம் தொடங்குது. ஆனா கடமடைக்கு தண்ணி வந்து சேர்றதே இல்ல. தமிழ்நாட்டோட டோட்டல் காவிரி நீர் கொள்ளளவு 95 டி எம் சி தான் இப்ப. மேட்டூர் அணல 10 அடி உயர்த்தினா 17 டி எம் சி கூடுதலா சேமிக்கலாம். அத தூர் வாரினா இன்னும் 25 டி எம் சி தேக்கலாம். தடுப்பணைகள் கட்டினா கூடுதலா 20.5 டி எம் சி வரும். புதுசா ப்ளான் போடவே தேவையில்ல. ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ப்ளான்லாம் ரெடி. செயல்படுத்ததான் மனசு இல்ல. இதயெல்லாம் செஞ்சு முடிச்சிருந்தா, உபரி நீர்ல கூட எங்களுக்கும் ரைட்ஸ் உண்டுனு சொல்லி கேக்கலாம். இப்ப அவன் தந்தாலும் எங்க போய் சேமிக்றது? உபரி நீர் கிடைக்கும்போது அது கடலுக்கு போகாம நாங்களே தேக்கி வச்சுக்குவோம்; அதனால மேகேதாடு அணையே வேணாம்னு நம்மால சொல்ல முடியுமா? முடியாது. வாட் எ ஷேம். இங்க நாம நம்மனு சொல்றது எல்லாம் எடப்பாடி அரச மட்டும் இல்ல. அரசாங்கம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் எல்லாருக்குமான கேள்விகள் இவை. நம்மோட நீர் நிர்வாக லட்சணம் இதான். வாட்டர்மேன்ல தொடங்கி பல மாநில நீர் நிபுணர்கள் வந்து பாத்து சொல்லிட்டு போய்ட்டாங்க. ஆனா நாம துரும்ப கூட கிள்ளி போடாம கீழ் பாசன உரிமை மேல் பாசன உரிமைனு சொல்லி மத்த ஸ்டேட்ஸ்கூட சண்ட போட்றோம். பாலாத்துல தடுப்பணையானு ஆந்திரா கூட, காவிரில மேகேதாடுவானு கர்நாடகா கூட, பெரியார்ல புது அணையானு கேரளாகூட.. இப்படி எல்லார்கூடவும் மோதிகிட்டே இருந்தா மக்கள் மனசுல கசப்பும் பரஸ்பர வெறுப்பும்தான வளரும்? ஒருவேள அதுதான் நம்ம தலைவர்களோட இலக்கோ?


play button 00:24 மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விமான நிலையம்

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விமான நிலையம்

play button 00:36 சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

play button 04:41 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:46 சர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி

சர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி

play button 00:23 கொத்தனார் பாட்டிலால் குத்தி கொலை

கொத்தனார் பாட்டிலால் குத்தி கொலை

play button 02:36 இடம் கொடுக்கலை; மத்திய, மாநில அமைச்சர்கள் விவாதம்

இடம் கொடுக்கலை; மத்திய, மாநில அமைச்சர்கள் விவாதம்

play button 01:42 எம்.ஜி.ஆர், ஜெ. ஆசைகளை மோடி நிறைவேற்றுகிறார்

எம்.ஜி.ஆர், ஜெ. ஆசைகளை மோடி நிறைவேற்றுகிறார்

play button 00:39 கராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'

கராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'

play button 00:24 வீரர்களுக்கான 'பாதுகாப்பு' பயிற்சி

வீரர்களுக்கான 'பாதுகாப்பு' பயிற்சி

play button 00:34 மாவட்ட கோ-கோ

மாவட்ட கோ-கோ

play button 00:25 கார் மோதி சிறுமி பலி; 4பேர் படுகாயம்

கார் மோதி சிறுமி பலி; 4பேர் படுகாயம்

play button 01:17 குமரியில் குரல் வளத்திற்கான தேடல்

குமரியில் குரல் வளத்திற்கான தேடல்

play button 01:04 தடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா

தடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா

play button 00:31 மாநில ஜூனியர்  இறகுப்பந்து

மாநில ஜூனியர் இறகுப்பந்து

play button 01:11 50 ஆண்டுகளுக்கு பின் MMC மாணவர்கள் சந்திப்பு

50 ஆண்டுகளுக்கு பின் MMC மாணவர்கள் சந்திப்பு

play button 01:15 உடல் உறுப்பு தானம் அவசியம்

உடல் உறுப்பு தானம் அவசியம்

play button 00:42 கல்வி வரம் வேண்டி சிறப்பு யாகம்

கல்வி வரம் வேண்டி சிறப்பு யாகம்

play button 00:40 விராலிமலை ஜல்லிகட்டு;  பார்வையாளர்கள் பலி, தடியடி

விராலிமலை ஜல்லிகட்டு; பார்வையாளர்கள் பலி, தடியடி

play button 00:54 கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்

play button 00:48 தனிக்கட்சி துவங்க எனக்கு தகுதி இல்லை

தனிக்கட்சி துவங்க எனக்கு தகுதி இல்லை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X