Advertisement

அரசியல் » CM யோகியின் ஆப்பரேஷன் பசு கட்சிகள் அலறல் டிசம்பர் 08,2018 17:55 IST

அரசியல் » CM யோகியின் ஆப்பரேஷன் பசு கட்சிகள் அலறல் டிசம்பர் 08,2018 17:55 IST

உத்தர பிரதேசத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டது வெறும் விபத்து என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் சொல்கிறார். திங்களன்று ஒரு கிராமத்தில் பதட்டம் உருவானது. புதருக்குள் பசுவின் உடல் பாகங்கள் கிடப்பதாக பஜ்ரங் தளம் தொண்டர்கள் ஆவேசம் காட்டினார்கள். இந்த அநியாயத்தை செய்தவனை சும்மா விடக்கூடாது என்று சொல்லி ஆட்களை திரட்டினர். போலீஸ் வந்தது. கும்பல் கல் வீசியது. தடியடி நடந்தது. கும்பல் சரமாரியாக தாக்கியது. இன்ஸ்பெக்டரும் ஒரு 20 வயது பையனும் மரணம் அடைந்தனர். இன்ஸ்பெக்டரை போட்டுத் தள்ள பஜ்ரங் தளம் நிர்வாகிகள் நடத்திய நாடகம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதை நிரூபிக்க ஒரு கடிதத்தை வெளியிட்டனர். அது போலீஸ் சூப்பிரண்டுக்கு வந்த கடிதம். பஜ்ரங் நிர்வாகிகள் 5 பேர் கையெழுத்து போட்டிருந்தனர். லோக்கல் பா ஜனதா எம்.பி அதை எஸ்.பி.க்கு ஃபார்வேட் செய்திருந்தார். “இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சரியில்லை. இந்து பண்டிகைகளை கொண்டாட முடியாமல் கெடுபிடி செய்கிறார். அவரை உடனே மாற்ற வேண்டும்” என்பது கடித வாசகம். விஷயம் பெரிதாவதை கவனித்தார் பிரதமர் மோடி. முதல்வர் யோகியை வரச் சொன்னார். யோகி உடனே இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினரை வரவழைத்தார். மனைவிக்கு 40 லட்சம், அம்மா அப்பாவுக்கு 10 லட்சம், குடும்பத்தில் ஒருத்தருக்கு அரசு வேலை தருவதாக உறுதி அளித்தார். ஒரு சாலைக்கும் கல்லூரிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயரை சூட்டப் போவதாகவும் சொன்னார். மறுநாள் பிரதமரை யோகி சந்தித்தார். அடுத்தநாள் அந்த சம்பவம் பற்றி முதல் முறையாக ஊடகர்களிடம் பேசினார். “அது ஒரு விபத்து. யாரும் இன்ஸ்பெக்டரை அடித்து கொல்லவில்லை” என்றார். அதே சமயம், சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. போலீஸ் சூப்பிரண்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டரை சுட்டதாக சொல்லப்படும் ராணுவ சிப்பாய் ஒருத்தர் காஷ்மீருக்கு தப்பிவிட்டார். அவரை பிடிக்க போலீஸ் போயிருக்கிறது. பசுவை வைத்தே எதிரிகளை திட்டம் போட்டு ஒழித்துக் கட்டுகிறார் என்று யோகி மீது பீதியுடன் புகார் வாசிக்கின்றன எதிர்க்கட்சிகள். “நீ செய், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று குற்றவாளிகளை யோகி பாதுகாப்பதாக கூறுகின்றன. கூட்டணி கட்சியான சிவசேனா கூட, போலீசை மத பிரச்னைகளில் இழுத்துவிட கூடாது என்று சொல்கிறது. எப்படியாவது தேர்தல் வரை விவகாரத்தை கொண்டுபோக எதிர்க்கட்சிகளும், உடனே ஒரு முடிவு கட்ட யோகியும் தீவிரமாக செயல்படுகின்றனர். பசுக்கள் பாவம், அரசியல் புரியாமல் அசைபோடுகின்றன.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:45 புதுக்கோட்டை கைதிகளின் நேர்மை

புதுக்கோட்டை கைதிகளின் நேர்மை

play button 01:08 பெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

பெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

play button 03:29 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:57 பந்தங்களை  பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'

பந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'

play button 01:00 ரயில்வே துறை  கைப்பந்து போட்டிகள்

ரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்

play button 00:45 மாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி

play button 05:53 மோடி தொடங்கிய புது புரட்சி

மோடி தொடங்கிய புது புரட்சி

play button 03:41 தள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்

தள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்

play button 02:55 மாடி வீடு  கட்டினால் தெய்வ குற்றம்!

மாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்!

play button 02:46 கன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்

கன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்

play button 02:08 விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 04:39 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 06:57 சேஷன் ஒரு சகாப்தம்

சேஷன் ஒரு சகாப்தம்

play button 01:24 ரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...

ரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...

play button 01:34 ஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்

ஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்

play button 00:41 மாநில கேரம் போட்டி

மாநில கேரம் போட்டி

play button 00:59 ரவுடி வெட்டிக் கொலை

ரவுடி வெட்டிக் கொலை

play button 01:08 500 ஏக்கர் கோயில் நிலம்  ஆக்ரமிப்பு

500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு

play button 00:47 மீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி

மீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி

play button 00:43 பள்ளியில்  மயங்கி விழுந்த மாணவி மரணம்

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X