பொது » பாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம் டிசம்பர் 12,2018 15:00 IST
வேலூர், அரக்கோணம் கையனூர் கண்டிகையைச் சேர்ந்தவர் சக்திவேல்-அமுதா தம்பதியரின் மகள் வன்சிகா. 7 வயதான வன்சிகா, வடமாம்பாக்கம், தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். குழந்தைகள் மீதான, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிறுமி வன்சிகா, அரக்கோணம் முதல் எம் ஆர் கண்டிகை வரையில் 10 கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு ஓட்டம் மேற்கொண்டார். சிறுமிக்கு வெர்ல்ட் மல்டிப்பிள் ரெகார்ட் சாதனைக்காக சான்றிதழை வழங்கப்பட்டது. அரக்கோணம் போலீஸ் டிஎஸ்பி துரைபாண்டியன், பள்ளி முதல்வர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் மாணவியை வெகுவாக பாராட்டினர்.
வாசகர் கருத்து