பொது » வனத்துறையை ஏமாற்றிய சிறுத்தை டிசம்பர் 12,2018 16:00 IST
குன்னூர், வண்டிச்சோலையில் நடமாடி வரும் சிறுத்தை தனியார் விடுதி அருகே உலா வந்தபோது, முள்கம்பி வேலியில் சிறுத்தையின் கால் சிக்கிக்கொண்டது. வெளியே எடுக்க முடியாமல் உறுமிக்கொண்டிருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டத்துடன் வலை உள்ளிட்டவைகளுடன் வந்தனர். ஆனால், அவர்களை பார்த்ததும் சிறுத்தை, வேக, வேகமாக காலை உருவி வெளியே எடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனால், வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர்.
வாசகர் கருத்து