Advertisement

சிறப்பு தொகுப்புகள் » தேர்தல் பக்கோடா டிசம்பர் 12,2018 16:00 IST

சிறப்பு தொகுப்புகள் » தேர்தல் பக்கோடா டிசம்பர் 12,2018 16:00 IST

5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்துது. சட்டீஸ்கர், மத்ய ப்ரதேஷ், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா. 3 மாநிலத்துல பா ஜனதா ஆட்சி நடந்துது. அந்த 3 ம் இப்ப அவங்க கைய விட்டு போயிருச்சு. மத்ய ப்ரதேஷ், சட்டீஸ்கர் இந்த ரெண்டுலயும் 15 வருசமா பா ஜனதா ஆட்சி. ஒரே சீயெம் முகத்த 15 வருசம் பாத்தது போதும்னு மக்கள் முடிவு எடுத்திருக்கலாம். ஆனா ராஜஸ்தான் கத வேற. 5 வருசத்துக்கு ஒரு தடவ புது ஆள பாக்கணும்னு ஒவ்வொரு தேர்தல்லயும் மாத்தி ஓட்டு போடுவாங்க ராஜஸ்தானிங்க. இப்பவும் அதான் நடந்திருக்கு. ஆனா பா ஜனதா அரசு மேல ரொம்ப அதிருப்தி. அதனால காங்கிரசுக்கு ஈசியா மெஜாரிட்டி வந்துரும்னு எல்லாரும் சொன்னாங்க. அப்டி நடக்கல. சிம்பிள் மெஜாரிட்டிக்கே சுயேச்சைங்ககிட்ட கை ஏந்த வேண்டிய நெலம. ஏன்னா, பழைய ஆளுகளுக்கு சீட் கெடயாதுனு பல பேர கழட்டி விட்ருச்சு காங்கிரஸ். அவங்க வீட்ல போய் படுக்கல. போட்டு பாத்ருவம்னு சுயேச்சையா நின்னாங்க. காங்கிரசயும் பா ஜனதாவயும் எதுத்து நின்னு அப்டி ஜெயிச்சவங்க 10 பேர்! அதோட ராகுல் செஞ்ச இன்னொரு தப்பு, ஜாதி ஜனங்க மட்டுமே இருக்ற சின்னச் சின்ன கட்சிகளையும், அந்தந்த பாக்கெட்ல மட்டும் செல்வாக்கு இருக்ற குட்டி கட்சிகளையும் பக்கத்துலயே வராதேனு துரத்தி விட்டது. வெளி பார்வைக்கு அது நல்ல பாலிசிதான். ஆனா, ஒவ்வொருத்தரும் ஆயிரம் ரெண்டாயிரம் ஓட்டு சேத்துவச்சு லெட்டர்பேடு கட்சி நடத்தும்போது, ஒருத்தரையும் கிட்ட சேக்காட்டி நிறைய ஓட்டு போயிரும்ல? காங்கிரசுக்கு அப்படியும் லாஸ் ஆச்சு. எலக்சனுக்கு முன்னாடி சீண்ட மாட்டேன்னுட்டு இப்ப மெஜாரிட்டி இல்லைன்னதும் கூப்டா அவங்கல்லாம் ஓடி வருவானா? கண்டிசன் போடுவான். எனக்கு ஃபைனான்ஸ் குடு, எனக்கு போலீஸ் குடு..ம்பான். இந்த கும்பல் சப்போட்டோட 5 வருசத்த ஓட்றது கஸ்டந்தான். சட்டீஸ்கர்ல எதிர்பார்த்தத விட அதிகமா கெடச்சிருக்கு காங்கிரசுக்கு. மொத்தம் உள்ள 90 சீட்ல 68 அது ஜெயிச்சிருக்கு. இத யாரும் எதிர்பாக்கல. ஏன்னா, காங்கிரசோட நெருக்கமா போற மாதிரி தெரிஞ்ச மாயாவதியோட பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் சீயெம்மா இருந்து அந்த கட்சியால டிஸ்மிஸ் செய்யப்பட்ட அஜித் ஜோகியோட ஜண்டா காங்க்ரஸ் சட்டீஸ்கர் கட்சியும் எதிர்பாராத விதமா கூட்டணி போட்டாங்க. மாயாவதி கட்சி 2 இடமும், அஜித் ஜோகி கட்சி 5 இடமும் ஜெயிச்சிருக்கு. இது போக நாலஞ்சு தொகுதில அரசுக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகள காங்கிரசுக்கு விழாம தடுத்திருக்கு. ஆக, இந்த கூட்டணி மட்டும் காப்பத்தலைன்னா பிஜேபிக்கு அந்த 15 இடங்கூட வந்திருக்காது போல. எப்டி வினோதமா இருக்கு பாத்தீங்களா, இந்த கூட்டணிகள் பண்ற வேலை? மாயாவதிய சேக்காம விட்டதுனால 3 இந்தி மாநிலங்கள்லயும் காங்கிரசுக்கு கொஞ்சம் செட்பேக்னா, தெலங்கானால கத அப்டியே உல்ட்டா. சந்திரபாபு நாயுடுவோட தெலுகு தேசம் கட்சியோட சேந்து ஓட்டு கேட்டதுனால அங்க காங்கிரசுக்கு செம்ம அடி. உள்ளதும் போச்சுடா நொள்ள.. கதயா, வெறும் 19 தான் கெடச்சுது. நாயுடுக்கு ஜஸ்ட் 2. இதுக்கு என்ன காரணம்னு பாத்தா.. தெலங்கானா பிரியதுக்கு முன்னாடி சந்திரபாபு ஆந்திரா சீயெம்மா இருந்தார். அப்போ தெலங்கானா வராம தடுக்க ஆனமட்டும் முயற்சி செஞ்சார். அத தெலங்கானா ஜனங்க மறக்கல. மறந்தவங்களுக்கு நல்லாவே ஞாபக படுத்தினார் சந்திரசேகர ராவ். அவருக்கே உரிய முரட்டு ஸ்டைல்ல. “தெலங்கானா கிடைக்கா விடாம தடுத்த மகாபாவி சந்திரபாபுவும், என் தியாகத்தால உங்களுக்கு கெடச்ச தெலங்கானா உருப்படக்கூடாதுனு நினைக்கிற ராகுலும் சேந்து வந்து ஓட்டு கேப்பாங்க. குடுக்க வேண்டியத குடுத்து அனுப்புங்க. இல்லாட்டி உங்க கத கந்தல்தான்”னு மெரட்டினார். கை மேல பலன் கெடச்சிருக்கு. இத்தனைக்கும் கேசிஆர் நு எல்லாரும் பயத்தோட சொல்ற சந்திரசேகர ராவ் அரசியல் வாழ்க்கை காங்கிரஸ்லதான் ஆரமிச்சுது. சந்திரபாபு அரசுலயும் அமைச்சரா இருந்தவர். அரசியல்ல அதெல்லாம் பாத்தா முடியுமா.. இதுல உள்ள மெசேஜ் என்னன்னா, எந்த தேர்தலா இருந்தாலும் ஃபார்முலாக்கள் ஜெயிக்கிறது இல்ல; மக்கள்தான் ஜெயிப்பாங்க. அவங்க போட்டு வச்சிருக்ற கணக்கு கவுன்டிங் முடியும்போதுதான் தெரியும். நார்த் இந்தியாவோட ஒப்பிட்டா மிசோரம் மக்கள் வேற டைப். வழக்கமா காங்கிரசுக்கு சப்போட்டா இருப்பாங்க. ஆனா, மத்தில காங்கிரஸ் ஆட்சி கவுந்துட்டா மிசோரம் மக்களும் காங்கிரச போக சொல்லிருவாங்க. வட கிழக்கு மாநிலங்கள் உருவான காலத்துல இருந்து இதுதான் நடந்துகிட்டு இருக்கு. ஒரு காலத்துல ஓஹோனு இருந்த கம்யுனிஸ்ட் கட்சிகள் எல்லாம் இப்ப எங்கேனு லென்ஸ் வச்சு தேட வேண்டி இருக்கு. 5 ஸ்டேட்லயும் ஆல் கலர்ஸ் தெரியுது; ஆனா இடதுசாரிகளோட சிவப்பு கலர ராஜஸ்தான்ல 2 தொகுதில மட்டும் பாக்க முடியுது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜெயிச்ச தொகுதிகள். மத்த ஸ்டேட்லாம் கம்யூனிஸ்டுகள் வாங்கின ஓட்டு அரை சதவீதத்துக்கும் கீழ. அரவிந்த் கேஜ்ரிவாலோட ஆம் ஆத்மி பார்ட்டியும் உப்புக்கு சப்பாணிதான். டெல்லிய தாண்டி அதோட பருப்பு வேகல. இருக்றத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படாம டெல்லில கான்சென்ட்ரேட் பண்ணி த மாடல் கவர்னன்சா மாத்திருந்தார்னா, அத வச்சாவது கொஞ்சம் ஷோ பண்ணிருக்கலாம். வேஸ்டா போயிட்டாரு. சமாஜ்வாடி கட்சி நிலைமையும் பெருசா சொல்ற்துக்கு இல்ல. உத்தர் ப்ரதேசுக்கு வெளிய ரொம்ப எடுபடல. மத்த கட்சிகள்கூட கம்பேர் பண்ணும்போது தனியா தெரியிறது மாயாவதி பார்ட்டிதான். சட்டீஸ்கர்ல 4 சதவீதம், மத்ய ப்ரதேசத்துல 5 சதவீதம், ராஜஸ்தான்ல 4 சதவீதம், தெலங்கானால ரெண்டர சதவீதம்னு ஓட்டு வாங்கிருக்கு பி எஸ் பி. 3 ஸ்டேட்ல 10 சீட் ஜெயிக்கவும் செஞ்சிருக்கு. நாட் ரியலி பேட், இல்ல. ஒட்டுமொத்தமா பாத்தா பாரதிய ஜனதாவுக்கு இது பெரிய எச்சரிக்கைனு சொல்லணும். கவ் பெல்ட், அதான் பசு பூமினு சொல்ற இந்தி பேசுற மாநிலங்கள்தான் பிஜேபியோட கோட்டை. அதுல இப்ப உத்தர் ப்ரதேஷ் மட்டும்தான் அவங்க கைல இருக்கு. ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் பறி போயிருச்சு. 2014 லோக்சபா தேர்தல்ல இந்த 3 ஸ்டேட்ல மொத்தம் உள்ள 65 சீட்ல 62 ஐ அள்ளுச்சு பிஜேபி. இப்ப வந்திருக்ற ரிசல்ட் அடுத்த வருசம் லோக்சபா தேர்தல்லயும் தொடர்ந்தா என்ன ஆகும்னு புரிஞ்சுக்க சர்வேல்லாம் தேவைப்படாது. என்னதான் க்ரூப் க்ரூப்பா மக்கள் பிரிஞ்சு நிக்கிறதா தலைவர்கள் கணக்கெல்லாம் போட்டாலும் இந்த தேர்தல்ல ஜாதி, மதம், கோயில் எதுவும் எடுபடல. வேல, தொழில், விவசாயம், வியாபாரம், வருமானம்.. இதுக்கெல்லாம் அப்றம்தான் மத்த விசயங்கள்னு மக்கள் உறுதியா இருக்காங்க. தலைவர்கள் புரிஞ்சுகிட்டா நல்லது.


play button 00:35 ரயிலை கவிழ்க்க சதி?; பீகார் இளைஞர்கள் கைது

ரயிலை கவிழ்க்க சதி?; பீகார் இளைஞர்கள் கைது

play button 00:31 பள்ளிகளுக்கான விளையாட்டு

பள்ளிகளுக்கான விளையாட்டு

play button 01:24 பழையாரில் பதற்றம்

பழையாரில் பதற்றம்

play button 01:04 ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

play button 04:54 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:29 பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

play button 01:14 செத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து  தவிக்கும் மக்கள்

செத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்

play button 00:32 மீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி

மீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி

play button 00:23 டேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'

டேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'

play button 00:31 ஐவர் கால்பந்து; ஓ.பி.சி.,வெற்றி

ஐவர் கால்பந்து; ஓ.பி.சி.,வெற்றி

play button 00:27 வக்கீல்களுக்கான நடை போட்டி

வக்கீல்களுக்கான நடை போட்டி

play button 00:33 மாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ.,  யுனைடெட் வெற்றி

மாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி

play button 00:57 ஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி

ஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி

play button 00:30 ஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ..,  சின்மயா வெற்றி

ஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி

play button 03:05 ஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்

ஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்

play button 01:22 விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

play button 02:09 எது இந்தி திணிப்பு?  நிர்மலா விளக்கம்

எது இந்தி திணிப்பு? நிர்மலா விளக்கம்

play button 05:46 குழந்தை கடத்தல்  சிக்கினார் அம்பிகா  படிப்பினை என்ன?

குழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன?

play button 01:03 முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்

முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்

play button 01:02 முதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது

முதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X