விளையாட்டு » வனத்துறை மாநில விளையாட்டு டிசம்பர் 14,2018 18:43 IST
தமிழக வனத்துறை ஊழியர்களுக்கான மாநில விளையாட்டு போட்டி கோவை வனக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. துவக்க விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி மற்றும் சட்டசபை துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் தமிழகத்தின் 13 வன மண்டலங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு வயது பிரிவுகளில் ஓட்டம், நடை, குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
வாசகர் கருத்து