Advertisement

சிறப்பு தொகுப்புகள் » இயல்பு நிலை திரும்பாத திருவாரூர் கிராமங்கள் டிசம்பர் 15,2018 16:00 IST

சிறப்பு தொகுப்புகள் » இயல்பு நிலை திரும்பாத திருவாரூர் கிராமங்கள் டிசம்பர் 15,2018 16:00 IST

திருவாரூர் மாவட்டத்தில் புயல் தாக்கி ஒரு மாதமான நிலையில் பல கிராமங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாததால், கிராம மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய முதல் வாரத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மின் வாரிய தொழிலாளர்களின் 15 நாட்கள் அயராது உழைப்பால் நகரப் பகுதிகளுக்கு மின்சாரம் கிடைத்தன. இதனால், கிராம மக்களின் துயர நிலை வெளிப்படவில்லை என்பதுதான் தற்போதைய கள நிலவரம். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி ஒன்றிய பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களுக்கு இன்னும் மின்சார விநியோகம் வழங்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான கிராமங்களில் மின்சாரம் இல்லாததால்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்ற முடியாமல் குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. ஜெனரேட்டர்கள்களைப் பயன்படுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றுவதற்கு அரசு ஏற்பாடு செய்தாலும், அதனை நிர்வகிப்பதில் ஏற்படும் சிரமங்ளால் மக்களுக்கு குறைந்த அளவே தண்ணீர் வழங்கப்படுகிறது. சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்ட பாலித்தீன் தார்ப்பாய்களே சேதமடைந்த வீடுகளை பாதுகாத்து வருகின்றன. கீற்றுகள் அல்லது ஓடுகள் போட பொருளாதார வசதியின்றி மக்கள் தவிக்கின்றனர். அவற்றை மாற்ற நினைத்தாலும் கீற்றுகள் கிடைப்பதில்லை. மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் படிப்பதற்கும் பெரும் சிரமப்படுகின்றனர். மக்களிடம் பண புழக்கம் இல்லாததால் வர்த்தகங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் அரசிடம் நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கூரை வீடு, தொகுப்பு வீடு ஓட்டுவீடுகளுக்கு மட்டுமே முழு நிவாரணம் வழங்கப்படுமென அரசு அறிவித்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகள், கால்நடைகள், சாய்ந்து போன மரங்கள் என அனைத்தையும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகளவில் இருந்தாலும் தென்னை விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் முத்துப்பேட்டை, மன்னார்குடி பகுதிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள்அடியோடு சாய்ந்துள்ளன பாதிப்புகளை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு இயல்பு நிலை திரும்ப விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் பேரிடரில் இருந்து மீள அரசு உதவி செய்தாலும் இழந்த பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள உழைக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தை மக்களிடத்தில் உருவாக்க சமூக நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.


play button 01:17 டாய்லெட் கழுவ எம்.பி. ஆகல; பிரக்யா சர்ச்சை

டாய்லெட் கழுவ எம்.பி. ஆகல; பிரக்யா சர்ச்சை

play button 01:17 தோனியின் ஓய்வு பற்றி யாரும் பேசக்கூடாது

தோனியின் ஓய்வு பற்றி யாரும் பேசக்கூடாது

play button 00:44 பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி

பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி

play button 04:51 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:26 ஜூனியர் கால்பந்து; கார்மல் கார்டன் சாம்பியன்

ஜூனியர் கால்பந்து; கார்மல் கார்டன் சாம்பியன்

play button 00:38 மாவட்ட கூடைப்பந்து;  யுனைடெட் அணி வெற்றி வாகை

மாவட்ட கூடைப்பந்து; யுனைடெட் அணி வெற்றி வாகை

play button 01:45 நிலவில் மனிதனுக்கு  இடம் தேடும்  சந்திரயான்2

நிலவில் மனிதனுக்கு இடம் தேடும் சந்திரயான்2

play button 00:56 ATM மோசடி  தமிழகம்  3வது இடம்

ATM மோசடி தமிழகம் 3வது இடம்

play button 01:31 132 கிராமங்களில் பெண் குழந்தை பிறக்காத மர்மம்

132 கிராமங்களில் பெண் குழந்தை பிறக்காத மர்மம்

play button 01:28 15 பேரை பதம் பார்த்த வெறிநாய்

15 பேரை பதம் பார்த்த வெறிநாய்

play button 03:35 வாடும் பூக்கள் : வரமாகும் உரங்கள் | Fertilizer Making | Madurai | Dinamalar |

வாடும் பூக்கள் : வரமாகும் உரங்கள் | Fertilizer Making | Madurai | Dinamalar |

play button 00:51 மாணவியை எரிக்க முயன்றவன் தப்பியோட்டம்

மாணவியை எரிக்க முயன்றவன் தப்பியோட்டம்

play button 02:54 சூர்யா பேசினாலும் மோடி கேட்பார் : ரஜினி

சூர்யா பேசினாலும் மோடி கேட்பார் : ரஜினி

play button 01:50 பயணத்தை தொடங்கியது சந்திரயான்-2 | Chandrayaan 2 successfully Launched

பயணத்தை தொடங்கியது சந்திரயான்-2 | Chandrayaan 2 successfully Launched

play button 00:20 சிலம்ப வீரர்களுக்கு தகுதி பட்டய தேர்வு

சிலம்ப வீரர்களுக்கு தகுதி பட்டய தேர்வு

play button 01:34 விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:43 தமிழக வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை  அவசியம்

தமிழக வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை அவசியம்

play button 01:30 சொட்டு நீரில் வளருது வாழை

சொட்டு நீரில் வளருது வாழை

play button 02:36 நான் குளம் பேசுகிறேன்

நான் குளம் பேசுகிறேன்

play button 01:26 4வது நாளாக தொடரும்  கடையடைப்பு

4வது நாளாக தொடரும் கடையடைப்பு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X