Advertisement

சம்பவம் » வாடா... வந்து மோதிப் பாரு : எஸ்.ஐ. சவால் டிசம்பர் 16,2018 00:00 IST

சம்பவம் » வாடா... வந்து மோதிப் பாரு : எஸ்.ஐ. சவால் டிசம்பர் 16,2018 00:00 IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகா நகரைச் சேர்ந்த முகம்மது ரபிக், சி.டி. கடை வைத்துள்ளார். இவரது மகன் அப்துல்லா. 2016ம் ஆண்டு கல்லூரியில் படித்த போது, வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் காந்தாரியின் மகன்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் இருவரும் சேர்ந்து அப்துல்லாவை வெட்டிக் கொன்றனர். மகனை கொன்றவர்களை கொலை செய்ய திட்டமிட்ட முகம்மது ரபிக், வெளியூரைச் சேர்ந்த கூலிப்படை மூலமாக காந்தாரியின் மற்றொரு மகன் கருப்பசாமியை சாத்தூரில் அரசு பஸ்சில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றார். முகம்மதுரபிக் மற்றும் கூலிபடையினர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த முகம்மது ரபிக், கூலிப்படை உதவியுடன் ஆகஸ்டில் காந்தாரியை வெட்டி கொன்றார். கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த முகமது ரபிக், காந்தாரி குடும்பத்தில் உள்ள மற்றவர்களை கொலை செய்ய வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்துள்ளார். அதன் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இத்தகவல் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து வாட்ஸ் குரூப்பில் உள்ள ரவுடி மூலம், எஸ்.ஐ. இசக்கிராஜா, முகம்மதுரபிக்கிற்கு ஆடியோ வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார். முகமது ரபிக், அவரது கூட்டாளி உலகுராஜ் ஆகியோருடன் கூட்டணி வைத்திருப்பவர்களை குரூப்பில் இருந்து கலைந்து செல்லுமாறு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து குரூப்பில் உள்ளவர்கள் வெளியேறியதாக தெரியவந்தது. எஸ்.ஐ. பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நேர்மை மற்றும் அதிரடிக்கு பெயர் போன எஸ்.ஐ இசக்கிராஜா, மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, பேருந்து நிலையத்தில் சிகரெட் பிடித்த அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக, இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் கிழக்கு காவல்நிலையத்திற்கு நியமிக்கப்பட்டார். இவரது இந்த துணிச்சலுக்கு காரணம், குத்துச்சண்டை வீரராக இருப்பது தான். 2013ம் ஆண்டு உலக பாக்சிங் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்ட இவர், வெண்கல பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:30 தீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்

தீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்

play button 02:07 விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 04:47 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:31 வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

play button 01:26 சகோதரர் போல செயல்படுங்கள்

சகோதரர் போல செயல்படுங்கள்

play button 00:55 சிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே!

சிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே!

play button 00:30 மாநில கராத்தே போட்டி

மாநில கராத்தே போட்டி

play button 01:39 மட்கும் குப்பையில்  மின்சாரம்; உரம் தயாரிப்பு

மட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு

play button 00:56 தருமபுரியில் 285 பேருக்கு  டெங்கு

தருமபுரியில் 285 பேருக்கு டெங்கு

play button 01:03 பஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்

பஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்

play button 01:32 இன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை

இன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை

play button 02:28 கன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி

கன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி

play button 03:00 உதவும் உள்ளங்களின்  ஆனந்த தீபாவளி

உதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி

play button 05:21 வாழ்விக்க வந்த பெண்கள்

வாழ்விக்க வந்த பெண்கள்

play button 00:29 32 கிலோ கஞ்சா பறிமுதல்

32 கிலோ கஞ்சா பறிமுதல்

play button 00:54 பார்சல் சர்வீஸில்  வந்த 1.5 டன்  குட்கா பறிமுதல்

பார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்

play button 00:39 குமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்

குமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்

play button 00:21 தேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர்  துப்பாக்கியுடன் கைது

தேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது

play button 00:20 தேசிய கராத்தே போட்டிகள்

தேசிய கராத்தே போட்டிகள்

play button 00:36 2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த  குழந்தை பிழைத்தது

2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X