பொது » கோமாரியால் சந்தை மூடல்: விவசாயிகள் பாதிப்பு டிசம்பர் 18,2018 20:03 IST
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் நோய் பரவாமல் தடுக்க கரூரை அடுத்த உப்பிடமங்கலம் மாட்டுச்சந்தையை நான்கு வாரத்திற்கு மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சந்தை மூடப்பட்டதால் புலியூர், லிங்கத்தூர் பகுதிகளில் விவசாயிகள் மற்றும் சந்தையை நம்பியிருப்போர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். விவசாயம் பொய்த்து போன நிலையில், கால்நடைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் போது, நோய்த்தாக்கத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து மருத்துவ முகாம்கள் அமைத்து, நோய்த்தாக்கத்தை குறைத்து சந்தையை திறக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
வாசகர் கருத்து