சம்பவம் » அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அடிதடி டிசம்பர் 23,2018 00:00 IST
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி புதூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ , அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சின்னப்பன் ஆகியோர் வரவேற்றனர். மேடை ஏறியவுடன் ஒரு கோஷ்டியினர் மார்க்கண்டேயனை முதலில் பேச சொல்லுங்கள் என குரல் எழுப்பியவுடன் இரு கோஷ்டிகளாக மோதினர். அமைச்சர் கடம்பூர் ராஜு செய்வதறியாது திகைத்தார். இருகோஷ்டியினரும் மாறி மாறி தாக்கினர். அமைச்சர் கடம்பூர் ராஜும் மேடையில் இருந்து இறங்கி கூட்டத்தில் புகுந்து குரல் எழுப்பினார். இருகோஷ்டிகளும் ஆவேசமாக சண்டையிட்ட நிலையில் போலீசார் அமைச்சரை பாதுகாப்பதிலும் கூட்டத்தை கட்டுப்படுத்துமாக சிரமப்பட்டனர்.
வாசகர் கருத்து