விளையாட்டு » 'டி-20' பைனலில் ஆர்.கே.எஸ்., டிசம்பர் 25,2018 19:00 IST
கோவையில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட 'ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20' கிரிக்கெட் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவகல்லூரியில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டியில் ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் அணியும், மணி பள்ளி அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஆர்.கே.எஸ்., அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மணி பள்ளி அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 77 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. வெற்றியடைந்த ஆர்.கே.எஸ்., அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வாசகர் கருத்து