விளையாட்டு » சென்னையில் மாணவர் குத்துச்சண்டை டிசம்பர் 27,2018 13:00 IST
குத்துச்சண்டை தினத்தை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடந்தது. 90க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விளையாடினர். 17 வயதுக்குட்பட்டோருக்கான 46 கிலோ எடை பிரிவில் விக்னேஷ்குமார், 48 கிலோ எடைபிரிவில் சதிஷ், 50 கிலோ எடை பிரிவில் ராம் வைஷ்ணவ், 52 கிலோ எடைபிரிவில் சந்தோஷ், 54 கிலோ எடை பிரிவில் ஜாகிர் உசேன், 57 கிலோ எடை பிரிவில் செல்வின் அருண், 60 கிலோ எடைபிரிவில் சரவணன் சாம்பியன் பட்டம் வென்றனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான 46 கிலோ எடை பிரிவில் பிரதீஷ், 49 கிலோ எடை பிரிவில் மாதவன், 52 கிலோ எடைபிரிவில் முகிலன், 56 கிலோ எடைபிரிவில் சக்திவேல், 64 கிலோ எடை பிரிவில் சஞ்சய் குமார், 69 கிலோ எடை பிரிவில் பைசல், 89 கிலோ எடை பிரிவில் கவின் சாம்பியன் ஆயினர்.
வாசகர் கருத்து