பொது » ஓ.ராஜா… வென்றார்… சென்றார்… மீண்டும் வந்தார்! டிசம்பர் 27,2018 00:00 IST
மதுரை மற்றும் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பெருந்தலைவராக, துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, டிச. 19ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற அதேநாளில் முதல்வர், துணைமுதல்வர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்போடு, அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார். மூன்றே நாட்களில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட, ராஜாவுக்கு மீண்டும் ஆவின் சங்க பெருந்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக, மதுரையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரே பதவிக்கு இரண்டாவது முறையாக, ஆவின் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் சால்வை அணிவித்து ராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து