சம்பவம் » காதலை எதிர்த்த தந்தை கொலை செய்த மகன் டிசம்பர் 28,2018 16:48 IST
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். இவரது மகன் விக்னேஷ் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். இதையறிந்த பெண்ணின் தந்தை, சுந்தர்ராமனிடம் தெரிவித்து, விக்னேஷை கண்டிக்குமாறு கூறினார். இதை அடுத்து, சுந்தர்ராஜன், விக்னேைஷ கண்டித்தார். அப்போது, ஆத்திரமடைந்த விக்னேஷ், தந்தையின் தலை மீது கல்லைக் கொண்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். தண்டராம்பட்டு போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து